பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றன. இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டீசர் என உற்சாகத்தில் உறைய வைத்தனர் படக்குழுவினர். படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 அல்லது 13ல் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் படம் பற்றி ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக அஜித் தான் நடிக்கும் படங்களை வெளியீட்டுக்கு முன்பு பார்ப்பதில்லை. தனக்கான காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்து டப்பிங் கையும் முடிப்பவர் அதன்பின் பட வெளியீட்டுக்கு பின்தான் படத்தை பார்ப்பார். ஆனால் வலிமை படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத அளவுக்கு சேசிங் காட்சிகள் இருப்பதால் படத்தை பார்க்கும் ஆவல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் வினோத்திடம் சொல்லி தன்னுடைய வீட்டிலேயே படத்தை பார்த்துள்ளார். பார்த்து முடித்தவுடன் வினோத்தை வெகுவாக பாராட்டியவர் அவருக்கு ஒரு ஆச்சரிய பரிசும் கொடுத்துள்ளார். அடுத்த படத்தை வேறு இயக்குனருடன் பணிபுரிந்து விட்டு அதன் பின்னர் வினோத் உடன் பணி புரியலாம் என்று முதலில் திட்டமிட்டு இருந்தவர் தற்போது உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்கலாம் என்று திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.