யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
நெல்சன் இயக்கும் பீஸ்ட்
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார் விஜய்.
இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66ஆவது
படத்தில் நடிக்கிறார். தில்ராஜூ தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கில்
தயாராகிறது. விஜய் தவிர்த்து மற்ற நடிகர், நடிகையர் தேர்வு தற்போது
நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்னமும் தொடங்கப்படாத இந்த
படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை வாங்க ஜீ நெட்வொர்க் என்ற நிறுவனம்
பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம்
தான் இதே தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும்
படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.