படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் |
2018ல் ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, அதன்பிறகு ஸ்பெயின் நாட்டில் குடியேறினார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தின் போது தனக்கு குழந்தை பிறந்ததாக 6 மாதங்கள் கழித்து சோசியல் மீடியாவில் தெரிவித்த ஸ்ரேயா, அதன்பிறகு தனது மகளுக்கு ராதா என்று பெயர் வைத்திருப்பதாகவும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து குழந்தையுடன் நேரத்தை செலவிடும் பல போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும், தன்னைப்பற்றிய தகவல்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஸ்ரேயா, தற்போது ஒரு வீடியோவை எடுத்தபடியே பேசிக்கொண்டே வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். அந்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் கவனம் தேவை என அறிவுரை செய்துள்ளனர்.