'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் கமல்ஹாசன் கதர் துணி நிறுவனத்தின் அறிமுகத்திற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பியபோது லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கமல் பூரண குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கமல் நலம்பெற வேண்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, கமல் உடல் நலம்பெற வேண்டியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‛‛நலமாக வர வேண்டும் சகோதரரே... கலை உலகை ஆ..........ஹா............என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்'' என்று பதிவிட்டுள்ளார்.