Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாநாடு பிரச்னை தீர்ந்தது : திட்டமிட்டப்படி ரிலீஸ்

24 நவ, 2021 - 23:26 IST
எழுத்தின் அளவு:
Maanaadu-problem-solved-:-releasing-as-per-schedule

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மாநாடு. டைம் லூப் கதையில் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் துவங்கியதில் இருந்து பல்வேறு பிரச்னைகளை கடந்து வளர்ந்து வந்த இந்த படம் ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது.

தீபாவளிக்கு படம் வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் ரஜியின் அண்ணாத்த படம் அநேக தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் இந்த படம் அப்போது வெளியாகவில்லை. மாறாக நாளை(நவ.,25) இப்படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். தியேட்டர்களுக்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.

இந்நிலையில் கடைசிநேரத்தில் இந்த படம் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என தெரிவித்தார்.

சிம்புவின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது என மாநாடு படத்தின் முன்பதிவிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் படத்தை வெளியிட பல தரப்பினர் பேசி வந்தனர். இறுதியாக இரண்டு முக்கிய நபர்கள் தலையிட்டு இந்த பிரச்னையில் சமரசம் செய்தனர். இதையடுத்து மாநாடு படம் நாளை(நவ.,25) திட்டமிட்டப்படி வெளியாகிறது. இதை ரசிகர்கள் கொண்டாடினர்.

தொடரும் சிம்பு பட சோகம்

சிம்புவின் ஒவ்வொரு படமும் கடைசிநேரத்தில் ஏதாவது ஒரு சிக்கலை சந்தித்து கொண்டே இருக்கிறது. வாலு தொடங்கி இப்போது நாளை வெளியாக மாநாடு வரை ஒவ்வொரு படமும் இதுபோன்று சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கடவுள் இருக்காரு
மாநாடு படம் சிக்கல் தீர்ந்தது தொடர்பாக வெங்கட்பிரபு ‛‛கடவுள் இருக்காரு'' என தெரிவித்தார். அதோடு அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. மாநாடு நாளை 25ம் தேதி வெளியாகிறது என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வாழை இலையில் உணவு - தமன்னாவின் உணர்வுவாழை இலையில் உணவு - தமன்னாவின் உணர்வு கமல் நலம் பெற இளையராஜா பதிவு கமல் நலம் பெற இளையராஜா பதிவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

naleem - colombo,இலங்கை
25 நவ, 2021 - 08:45 Report Abuse
naleem "ஆம்பள" என்று படத்துக்கு மட்டும் பெயர் வைத்து நடித்த ப்பிறவியின் வேலையாக இருக்கும்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
25 நவ, 2021 - 06:21 Report Abuse
meenakshisundaram படம் வெளிவரும் தேதியை வச்சு நல்ல விளம்பரம் பண்ணி இருக்காங்க -ரஜினி தனது அடுத்த படத்தில் இந்த டெக்னீக்கை உபயோகிக்கவும்
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
28 நவ, 2021 - 05:42Report Abuse
Sanny இன்னுமா உனக்கு புரியல. ரஜனி வேற லெவலில் ( அரசியல் பிரவேசம் அமெரிக்க Medical Treatment) படத்துக்கு அனுதாபரிதியில் விளம்பரம் தேடுறார். See the Different....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in