ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் ஆந்திரா, தெலுங்கானாவிலும் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அன்றைய தினம் தெலுங்கில் சிரஞ்சீவி - ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படமும் திரைக்கு வருகிறது.
பெரும்பாலும், ஆந்திராவில் முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தமிழ் நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு தயங்குவார்கள். ஆனால் சூர்யாவிற்கு தெலுங்கில் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால் சிரஞ்சீவி படம் வெளியாகும் அதே நாளில் எதற்கும் துணிந்தவன் படத்தையும் துணிச்சலாக இறக்கி விடுகிறார்கள். அதனால் சூர்யா படத்திற்காக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளும் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.