ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
தமிழில் 2016ம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படத்தில் ரகுமான் நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு மாபியா, நரகாசுரன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன், தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் தனது புதிய படத்தை தொடங்கப் போகிறார். அந்த படத்தில் தனது முதல் பட நாயகனான ரகுமான் மற்றும் அதர்வா ஆகியோரை நடிக்க வைக்கிறார் கார்த்திக் நரேன். அதோடு, அப்படத்தில் ரகுமான் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த இரண்டில் ஒரு வேடம் வில்லன் வேடம் என்றும் ஒரு செய்தி கசிந்துள்ளது.