ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
தமிழில் வாய் மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். தற்போது தமிழில் ஹாய் சினாமிகா இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதோடு மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனவும் பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛விஜய்யின் நடனம் குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் விஜய்யின் ரசிகன். இதற்கு காரணம் அவரது நடனம்தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறேன். முக்கியமாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தனை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடி இருப்பார். அது அத்தனை எளிதான விசயமல்ல. என்னை பொருத்தவரை விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாக தெரிகிறார். அவரது நடனத்திற்கு எப்போதுமே நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் துல்கர் சல்மான்.