பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? |
நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் படம் கிராண்மா. இதில் சோனியாவுடன் விமலா ராமன், சர்மிளா நடித்துள்ளனர். ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பவுர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ஜிஎம்ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். யஸ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், சங்கர் ஷர்மா இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஷிஜின்லால் கூறியதாவது : ஹாலிவுட் தரத்திலான ஆக்ஷன் பேய் படம். கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வர வேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். சோனியா அகர்வால், சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார். திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது. என்றார்.