சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்களில் தொடர்ச்சியாக நடித்த அஜித் குமார் நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து தற்போது வலிமை படத்திலும் வினோத் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தையும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனபோதிலும் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது வலிமை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62வது படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் ஏற்கனவே ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கியவர். இதில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு 2019ம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.