சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
அரசியலில் இருந்து ரஜினி விலகிக் கொண்ட நிலையில் விஜய்க்கு அரசியல் ஆசை அதிகரித்திருப்பதாக வெளிவரும் தகவல்களை உறுதி செய்வது போல அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி வருகிறது. அரசியலில் இறங்கினால் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதை அறிய நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடலாம் என்று விஜய் பச்சைக்கொடி காட்டினார்.
இதனால் இந்த தேர்ததலில் பல்வேறு பதவிகளுக்கு 161 பேர் போட்டியிட்டனர், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். இதனால் விஜய் உற்சாகம் அடைந்துள்ளனார். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ரகசியமாக நடந்தது. இந்த சந்திப்பு தொடர்பாக வெற்றி பெற்றவர்களுடன் விஜய் குரூப் போட்டோ எடுத்துள்ளார். அதில் ஒரு ஓரத்தில் விஜய் அமர்ந்துள்ளார். இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.