'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுவர் நடிகர் சிவக்குமார். கோவை மாவட்டம், காசிகவுண்டன் புதூர் தான் இவரது சொந்த ஊர். 1941ம் ஆண்டு அக்., 27ல் ராக்கிய கவுண்டர் - பழனியம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் பழனிசாமி. சிறந்த ஓவியரான இவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னை வந்து நடிகர் சிவகுமாராக 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பு, ஓவியம், இலக்கியம், பேச்சாளர் என பன்முக திறமையால் இன்று தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயனாக திகழ்கிறார். இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடும் இவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்...
![]() |
1965ல் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‛காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த சிவகுமாருக்கு 1970களில் கதாநாயகன் வேடமேற்று நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்து பல வெற்றிப் படங்களை தந்தார்.
![]() |
‛‛அக்னி சாட்சி மற்றும் "சிந்து பைரவி" போன்றவை அடங்கும். இயக்குநர் எம்.பாஸ்கர், கே.ரங்கராஜ், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் என்று அன்றைய முன்னணி இயக்குநர்கள் அனைவரின் படங்களிலும் நடித்த பெருமை இவருக்கு உண்டு.
![]() |
திரைப்பட நாயகனாக மட்டுமின்றி இவர் நல்ல ஓவியர் என்பதற்கு இவருடைய பல ஓவியங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் போன்றவை உதாரணங்களாக கூறலாம்.
![]() |
எழுத்துப் பணியிலும் இவருக்கு ஆர்வம் உண்டு என்பதற்கு இவர் எழுதிய "நான் ராஜபாட்டை அல்ல" என்ற புத்தகத்தை கூறலாம். இலக்கியப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 80 வயதிலும் யோகாவில் அசத்தும் சிவகுமார் கடந்தாண்டு கொரோனா காலக்கட்டத்தில் மூச்சுபயிற்சி தொடர்பாக ஆலோசனை கூறி பலருக்கும் உதவி செய்தார். சிவகுமார் சிறந்த பேச்சாளர். பல மேடைகளில் இவரது பேச்சுக்கள் மற்றவர்களுக்கு உந்துதலாக அமைந்தது என்றால் மிகையல்ல. தொடர்ந்து 2.15 மணிநேரம் எந்தவித இடைவெளியின்றி மகாபாரதம் இதிகாச புராணத்தை பேசி அசத்தியவர்.
![]() |
எந்த ஒரு துறையிலும் தீய வழியில் செல்வதற்கு ஏராளமான வழிகள் உண்டு. சினிமா துறையில் அது அதிகம். அப்படிப்பட்ட துறையில் ஒரு மனிதர் இப்போது வரை எந்தவித ஒழுக்ககேடுமின்றி இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் சிவகுமார். தன்னுடைய பிள்ளைகளையும் அப்படியே கொண்டு வந்துள்ளார்.
![]() |