Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்த பிரித்விராஜ்

26 அக், 2021 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Prithviraj

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் உச்சபட்ச உயரம் 155 அடி. அதிகபட்ச கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். தற்போது 142 அடிவரை நீர் தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் மேற்கொண்டு வருகிறது.

125 ஆண்டுகள் மிகவும் பழமையான அணை என்பதால், 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். கேரளா இரண்டாக பிளந்துவிடும் என, கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்தது.

இதனால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வைகை அணைக்கு நீரை திறந்துவிட கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொடர் கடிதம் எழுதினார். இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணையை கைவிட வேண்டும் என மலையாள நடிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் நடிகர் பிருத்விராஜ் #DecommisionMullaperiyarDam என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொருட்படுத்தாமல் 125 வருட அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருக்க காரணமோ மன்னிப்போ இல்லை! நாம் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை ஒருபுறம் வைத்து எது சரியானதோ அதைச் செய்யும் நேரம் வந்துவிட்டது. சிஸ்டத்தை மட்டுமே நம்ப முடியும், சிஸ்டம் சரியான முடிவை எடுக்க பிரார்த்திப்போம்! என்று கூறியுள்ளார்.

பிரித்விராஜின் இந்த கருத்துக்கு தமிழ் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு தோன்றியுள்ளது. நேற்று அவருக்கு எதிராக சில ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சிம்புவால் ரூ.15 கோடி நஷ்டம் : போலீசில் மைக்கேல் ராயப்பன் புகார்சிம்புவால் ரூ.15 கோடி நஷ்டம் : போலீசில் ... பருத்தி வீரன் பற்றி இன்னும் பேசுகிறார்கள்: கார்த்தி நெகிழ்ச்சி பருத்தி வீரன் பற்றி இன்னும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Narasimhan - Manama,பஹ்ரைன்
30 அக், 2021 - 11:47 Report Abuse
Narasimhan சூடு சுரணையில்லாத தமிழர்கள் மலையாளியான இவன், கன்னடன் பிரகாஷ் ராஜ் மற்றும் தெலுங்கன் பிரம்மானந்தம் நடித்த தமிழ் படங்களை விழுந்து விழுந்து பார்க்கின்றனர்
Rate this:
Vijai - chennai,இந்தியா
28 அக், 2021 - 10:13 Report Abuse
Vijai அவர் சொல்வதில் என்ன தவறு? தன்னுடைய மாநிலத்தின் நலனுக்காக தன கருத்தை முன்வைக்கிறார். அது சரியோ தவறோ ஆனால் அவருக்கு தன கருத்தை சொல்ல உரிமை உள்ளது.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27 அக், 2021 - 12:32 Report Abuse
NicoleThomson இவனைப்போன்ற muட்டாள் மல்லுபாண்டிகளை தமிழக rsb ஊடகத்திநர் தான் கொண்டாடி வருகின்றனர் , இவனது field படங்களை ஒதுக்கினால் பட்டிகள் போல பின்னாடி ஓடிவருவான்
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
26 அக், 2021 - 16:01 Report Abuse
Tamilan இவன் மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பேரன் என கேள்விப்பட்டேன்.. இவன் தமிழ்நாட்டு பக்கம் காலெடுத்து வச்சா உண்டு இல்லை என்று பண்ணனும்
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
30 அக், 2021 - 01:28Report Abuse
Nellai Raviசார், நிச்சயமாக இல்லை. இவர் முன்னாள் மலையாள நடிகர் சுகுமாரன் நின் மகன். இந்த சுகுமாரன் வேறே, புரட்சி தலைவர் அன்னான் மகன் சுகுமாரன் வேறே....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in