ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு டயர் தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ஆமீர்கான் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் தெருவில் விளையாடும் சிறுவர்களை அழைத்து ஆமீர்கான் 'சாலைகள் பட்டாசு வெடிப்பதற்காக அல்ல, சாலைகள் கார்களுக்காக' என்று அறிவுரை சொல்கிறார்.
இந்த விளம்பரம் இந்துக்களின் தீபாவளி பண்டிகைக்கும், அவர்களது நம்பிக்கைக்கும் எதிரானது. இதில் வேண்டும் என்றே இஸ்லாமியரான ஆமீர்கான் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். பரபரப்பு பப்ளிசிட்டிக்காக இந்துக்களை புண்படுத்துவதா என்ற விளம்பரத்துக்கும், அதில் நடித்துள்ள ஆமீர்கானுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே டயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் ஆமிர்கான் தெருக்களில் பட்டாசு வெடிப்பது குறித்து அறிவுரை வழங்கும் உங்கள் விளம்பரத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. பொதுமக்களின் பிரச்சினைகள் மீதான உங்கள் அக்கறைக்குப் பாராட்டுகள். ஆனால், இதேபோல சாலைகளில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னொரு பிரச்சினையையும் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது வெள்ளிக்கிழமை மற்றும் இதர விழா நாட்களில் தொழுகையின் பெயரில் முஸ்லிம்களால் சாலைகள் மறிக்கப்படுவது.
பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை நீங்கள் உணர்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்துக்களுக்கு எதிரான நடிகர்கள் குழு ஒன்று எப்போதும் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் சமூகத்தில் இருக்கும் தவறுகளைப் பற்றிப் பேசுவதில்லை.
இவ்வாறு அனந்த்குமார் ஹெக்டே கூறியுள்ளார்.