புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பாலிவுட் நடிகையான பிரக்யா ஜெய்ஸ்வால், தற்போது தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக அகந்தா படத்திலும் இந்தியில் சல்மான் கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரக்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்பு அது குணமானது. தற்போது தனக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் அது குணமானதும் இரண்டு தடுப்பூசியும் உரிய இடைவெளியில் போட்டுக் கொண்டேன். ஆனாலும் இப்போது எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
லேசான கொரோனா அறிகுறி வந்துள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், என்கிறார்.