அஜித்தை வைத்து விரைவில் படம் இயக்குவேன்! -சொல்கிறார் லோகேஷ் கனகராஜ் | இந்த தலைமுறைக்கு பாலாவை அடையாளம் காட்டும் படம் வணங்கான்! - அருண் விஜய் | அஜித்தின் 'விடாமுயற்சி' படத்திற்கு யுஏ சான்றிதழ்! | மகாராஜா பட நிறுவனத்துடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி! | ஜேசன் சஞ்சய் கதையை கேட்டு அதிர்ச்சி ஆன தமன்! | என் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய படம் கேம் சேஞ்ஜர் - அஞ்சலி | 8 வருடங்களுக்கு பிறகு இணையும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.எல். விஜய்! | கிளாசிக்கல் மியூசிக் படியுங்கள்: அனிருத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அட்வைஸ் | தனியார் துப்பறிவாளராக நடித்துள்ள மம்முட்டி | 'எமர்ஜென்சி' படம் பார்க்க பிரியங்காவுக்கு கங்கனா அழைப்பு |
விஜய் படங்களின் அறிவிப்புகள் வந்த உடனேயே நாயகி யார் என்ற கேள்வி தான் அனைத்து தரப்பிலும் விவாதமாகும். விஜய்யுடன் ஜோடி சேர நாயகிகளும் போட்டி போடுவார்கள். அந்த வகையில் நீண்ட நாட்களாக ராஷ்மிகா விஜய்யுடன் ஜோடி போடும் ஆவலில் இருக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகும் பீஸ்ட் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வந்துவிட்டது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் 'பைரவா', 'சர்கார்' படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.