மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி. துக்ளக், ரிக்கி, நம் ஏரியய ஒன் தினா, கிரிக் பார்ட்டி உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனராகி உள்ளினதவர கண்டத்தே, கிரிக் பார்ட்டி, ராமராஜுனா உள்பட பல படங்களை இயக்கினார். அவனே ஸ்ரீமன்நாராயணா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.
தற்போது ரிச்சர்ட் அந்தோணி என்ற பேண்டசி திகில் படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். கார்ம் சாவ்லா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தைப் பற்றி ரக்ஷித் ஷெட்டி கூறியதாவது: ரிச்சர்ட் அந்தோணி உலிடவரு கண்டந்தி படத்தின் 2ம் பாகம் என்றும் இதனை சொல்லலாம். அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால், இது அதைவிடவும் இன்னும் சுவாரஸ்யமானது, பிரமாண்டமானது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் உலிடவரு கண்டந்தி எழுதும் போது அதற்கு அடுத்த பாகம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எல்லாமே விதிப்படி நடக்கும் என்பதுபோல் இது குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் போல.
இந்தக் கதை ஏற்கெனவே இருக்கும் ஒரு கதை. அதற்கான நேரம் வாய்த்தபோது அதை நான் வடித்திருக்கிறேன். அப்படித்தான் நான் இப்போது உணர்கிறேன். இதன் அடுத்த கட்டத்தையும் நான் எழுதுவேன். இந்த உலகம் வாஞ்சையுடன் அதற்கான வாய்ப்பை எனக்கு நல்கும் என நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.




