பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது |
கேரளாவை சேர்ந்த ராப் பாடகர் ஹிரன் தாஸ் முரளி. வேடன் என்ற பெயரில் ராப் ஆல்பங்கள் வெளியிட்டு புகழ் அடைந்தார். சமீபத்தில் இவர் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். முதலில் இதை மறுத்த வேடன், சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீண்ட விளக்கம் அளித்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
பெண்களிடம் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா, அதற்கான தண்டனை வேண்டாமா என்று அவருக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தது. ஆனால் நடிகை பூ பார்வதி மட்டும் பாடகருக்கு ஆதரவாக அதாவது அவரது மன்னிப்பை வரவேற்று பதிவிட்டிருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பார்வதியை கடுமையாக விமர்சித்தனர். உங்களிடம் ஒருவர் தவறாக நடந்து விட்டு மன்னிப்பு கேட்டால் விட்டு விடுவீர்களா? என்று கேட்டனர்.
இந்த நிலையில் தனது ஆதரவை விலக்கிக் கொண்ட பார்வதி, இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்ட பாடகர் வேடனுக்கு எதிராக தைரியமாகப் பேச வந்த பாதிக்கப்பட்டவர்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். பல ஆண்கள் தன் தவறை ஒப்புக்கொள்ளக் கூட யோசிக்கும் நிலையில் அவரது அந்த மனிப்புப் பதிவை நான் லைக் செய்திருந்தேன். ஆனால் இது ஒன்றும் கொண்டாட வேண்டிய மன்னிப்பு அல்ல என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.
இந்த வழக்கின் அடுத்தடுத்த கட்டங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பது மிக மிக முக்கியம் என்பதை நான் நம்புகிறேன். வேடனின் இந்த மன்னிப்புப் பதிவு சரியாக இல்லை என்று பாதிக்கப்பட்ட சிலர் நினைக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் எனது ஆதரவை நீக்கிவிட்டேன். என் தவறை திருத்திக் கொண்டுவிட்டேன்.
அவரை மன்னிப்பதும், பாதிப்பிலிருந்து மீள நினைப்பதும் எப்போதுமே பாதிக்கப்பட்டவரின் உரிமை. அவர்கள் பக்கம் தான் நான் என்றும் நிற்பேன். என் செயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பார்வதி எழுதியிருக்கிறார்.