'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் | நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' |

இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் கடந்த 10 வருடங்களில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. இந்த படத்திற்கு மலையாளம் மட்டுமல்லாது தென்னிந்திய அளவிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து படம் எப்போது துவங்கும், வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
அது மட்டுமல்ல இந்த படம் ஹிந்தியிலும் இரண்டு பாகங்கள் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகின. இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடித்திருந்தார். அதனால் தற்போது மலையாளத்தை விட ஹிந்தியில் இந்த படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என அஜய் தேவ்கன் ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயம் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கும் என்று அவர் அறிவித்திருந்தார். ஜீத்து ஜோசப் கூட அதே அக்டோபரில் தான் இந்த படத்தை துவங்க போகிறோம் என்று கூறியிருந்தார். இரண்டு படங்களும் ஒரே தேதியில் தான் ரிலீஸாக போகின்றன என்றும் கூட சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்திய பேட்டியில் ஜீத்து ஜோசப் கூறும்போது, “திரிஷ்யம் 3 படம் முதலில் மலையாளத்தில் தான் வெளியாகும். அதன்பிறகு தான் ஹிந்தியில் வெளியாகும். திரிஷ்யம் 3 ஸ்கிரிப்ட்டுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்னதாக அவர்களாக ஒரு புதிய வெர்சனை எழுதி படமாக இயக்கினால் நிச்சயமாக அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அவர்கள் அப்படி செய்வார்கள் என நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.




