'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லாலை வைத்து இயக்கிய திரிஷ்யம் படம் மூலமாக தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பேசப்படும் இயக்குனராக உயர்ந்தார். தொடர்ந்து ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் விதமான கதை அம்சம் கொண்ட படங்களை கொடுத்து வரும் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நேர் திரைப்படமும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஜீத்து ஜோசப்பின் மகள் கேத்தியும் தந்தையின் வழியில் தானும் இயக்குனர் பாதையில் அடி எடுத்து வைத்து தனது முதல் படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்து விட்டார்.
'பார் ஆலிஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தியேட்டர்களுக்கு வராமல், ஓடிடி தளங்களுக்கும் செல்லாமல் இன்று குட்டி ஸ்டோரீஸ் என்கிற யுடியூப் சேனலில் நேரடியாகவே ரிலீஸ் ஆகிறது. இந்த தகவலை இயக்குனர் ஜீத்து ஜோசப் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் திரிஷயம் புகழ் எஸ்தர் அனில் கதாநாயகியாக நடித்துள்ளார். தந்தையைப் போல மகளும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.