'கங்குவா' பட வழக்கு முடிவு : படம் திட்டமிட்டபடி வரும்... | தமிழில் அறிமுகமாகும் கயாடு லோஹர் | நவ.29ம் தேதி திரைக்கு வரும் சித்தார்த்தின் ‛மிஸ் யூ' | மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் - பிரபாஸ் புதிய கூட்டணி? | ''சினிமா தொழில் 'ரிஸ்க்'; 3 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும்'': வருண் தேஜ் | பிரபாஸ், ஹோம்பாலே கூட்டணியில் மூன்று படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'அமரன்' இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ் | மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் | ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூர்யா - தனுஷ் |
நடிகை பார்வதி தென்னிந்திய மொழிகளையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்ற நடிகையாக மாறிவிட்டார். பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் தெலுங்கில் நடித்த தூதா மற்றும் ஹிந்தியில் நடித்துள்ள கடக் சிங் என இரண்டு வெப் சீரிஸ்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. அடுத்ததாக துல்கர் சல்மான் தயாரிக்கும் படம் ஒன்றில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பார்வதி நடிக்கிறார் என்ற செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது.
ஆனால் இந்த தகவலை பார்த்ததும் உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பார்வதி. இது குறித்து அவர் கூறும்போது, “எந்த ஒரு சூப்பர் ஹீரோ படத்திலும் நடிப்பதற்கு நான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. யாராலோ என்ன காரணத்தினாலோ தவறான செய்தி பரப்பப்படுகிறது. ஓகே குட் பை” என்று கூறியுள்ளார்.