ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் |

மலையாள சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கங்காதரன். கிரஹலட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில் 1977ம் ஆண்டு முதல் படங்களை தயாரித்து வந்தவர். 20க்கும் மேறப்பட்ட மலையாள படங்களை தயாரித்துள்ளார். 'ஒரு வடக்கன் வீரகதா', 'அசுவிண்டே அம்மா', 'தூவல் கொட்டாரம்' உள்ளிட்ட படங்கள் முக்கியமானவை.
1996ல் வெளியான இவரின் 'கானாக்கினாவு', 2001ம் ஆண்டு வெளியான 'சாந்தம்' ஆகிய படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது. 5 படங்களுக்கு மாநில விருது கிடைத்துள்ளது. தொழிலதிபரான இவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார். மேலும், மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார்.
80 வயதான இவர் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். கங்காதரன் மறைவுக்கு கேரள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கங்காதரனின் வாரிசுகள் ஷேனுகா ஜெய்திலக், ஷெக்னா விஜில் மற்றும் ஷெர்கா சந்தீப் ஆகியோரும் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.




