'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கன்னட திரையுலகில் உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார். திரையுலகில் நுழைந்து கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த சிவராஜ்குமார், தற்போது பிற மொழிகளின் பக்கமும் கவனத்தை திருப்பி உள்ளார். அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட்10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பெரிய தமிழ் படங்களில் நடித்து விட்ட சிவராஜ்குமார், அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்க இருக்கிறார். நடிகர் பிரித்விராஜ் இயக்க உள்ள படத்தில் தான் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அனேகமாக மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்க உள்ள லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் மோகன்லாலுடன் சிவராஜ்குமார் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.