ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
தெலுங்கில் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2020ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் அலவைகுண்ட புரமலோ. குடும்ப கதை களத்தை மையப்படுத்தி உருவான இப்படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி படமாகியது. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தொடர் தோல்வியில் இருந்து இப்படம் தான் அல்லு அர்ஜுன், த்ரி விக்ரம் இருவரையும் மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது என்று கடந்த சில மாதங்களாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படப்பிடிப்பை முடித்தவுடன் த்ரி விக்ரம் இயக்கத்தில் உடனடியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளாராம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.