சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரை உலகை சேர்ந்த பிரபல குணச்சித்திர நடிகர் சீனிவாசன். இவரது இரண்டு மகன்களில் ஒருவர் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன். இவரது தம்பி தயன் சீனிவாசனும் நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் முழு வீச்சில் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடித்து வரும் ஒசானா என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை என்கிற ஊரில் நடைபெற்று வருகிறது. இங்கே உள்ள மார்க்கெட் ஒன்றில் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டபோது அங்குள்ள வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக கூறி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒரு பகுதியினர் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினார்கள்.
மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் மார்க்கெட்டில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு இழப்பீடாக மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என பிடிவாதம் காட்டினர். வேறு வழியின்றி பணத்தை கொடுத்த பின்னரே படக்குழுவினர் அங்கே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடிந்தது. அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்காக ஏற்கனவே நகராட்சியில் பணம் செலுத்தி உரிய அனுமதியை படக்குழுவினர் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.