சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர். இவரது படப்பிடிப்பு தளங்களுக்கு ரசிகர்கள் வந்தால் கூட அதுபற்றி கோபம் கொள்ளாமல் ஊக்கப்படுத்தவே செய்பவர். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட மாத இடைவெளியில் ரசிகர்கள் சந்திப்புக்கு என தனியாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அவர்களை சந்தித்து வருகிறார் அல்லு அர்ஜுன். சமீப நாட்களாக விசாகப்பட்டினத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கே படப்பிடிப்பு முடிந்து அடுத்ததாக ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர இருக்கிறது.
இந்த இடைவெளியில் ரசிகர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் அல்லு அர்ஜுன். அதில் கலந்து கொண்ட ரசிகர்கள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தனது கைகளில் தூக்கி ஏந்தியபடி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக நடிகர் விஜய் கூட சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்கள் சந்திப்பின்போது இதேபோன்று ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை தனது கைகளில் தூக்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டது அப்போது இதே போல வைரலானது குறிப்பிடத்தக்கது.