லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். தமிழில் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன். அஜித் நடித்த ஜனா மற்றும் ஆர்கே நடித்த எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களையும் இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான கடுவா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மோகன்லாலை வைத்து இவர் இயக்கியுள்ள அலோன் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய கிங் என்கிற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப்படத்தில் மம்முட்டி கலெக்டராக நடித்திருந்தார். மம்முட்டிக்கு மிகப்பெரிய கமர்ஷியல் அந்தஸ்தையும் அந்த படம் பெற்றுத்தந்தது. இந்தப்படம் வெளியாகி 27ம் ஆண்டை தொட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாக மம்முட்டியை நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.
இந்த படத்திற்கு பின் இவர் சுரேஷ்கோபியை வைத்து இயக்கிய கமிஷனர் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த இரண்டு படங்களுக்கும் கதை எழுதிய கதாசிரியர் ரெஞ்சி பணிக்கர் நீண்ட நாட்கள் கழித்து மம்முட்டி, சுரேஷ்கோபி இருவரையும் இணைத்ததுடன் மட்டுமல்லாமல் இவர்கள் படங்களின் டைட்டில்களையும் இணைத்து 'தி கிங் அண்ட் கமிஷனர்' என்கிற பெயரில் ஒரு படத்தையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.