போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! |

பெங்களூரு : மூத்த திரைப்பட நடிகர் லோஹிதாஸ்வா, மாரடைப்பால் பெங்களூரில் நேற்று காலமானார்.
கன்னட திரையுலகின் மூத்த நடிகர் லோஹிதாஸ்வா, 80. பெங்களூரில் வசித்து வந்த இவருக்கு, அக்டோபர் 10ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே அவுட்டில் உள்ள சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
துமகூரு தொண்டகரேவை சேர்ந்த லோஹிதாஸ்வா, திரைப்பட நடிகர் மட்டுமின்றி, நுாற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தவர். ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றியவர். அபிமன்யூ, ஏ.கே.47, அவதார புருஷா, சின்னா, ஹொச நீரு, கஜேந்திரா, விஸ்வா, பிரதாப், போலீஸ் லாக்கப், ரெடிமேட் கண்டா, ஸ்நேகா லோகா, சுந்தரகாண்டா, சிம்ஹத மரி, மூரு ஜன்மா, டைம் பாம் உட்பட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
'டிவி' தொடர்களிலும் நடித்து, லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். இவரது இறப்பிற்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லோஹிதாஸ்வா உடல், குமாரசாமி லே அவுட்டில் உள்ள வீட்டில் இன்று காலை 7:30 மணி முதல் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட உள்ளது. பின், சொந்த கிராமத்தில் இறுதி சடங்கு நடத்தப்படுவதாக அவரது மகன் சரத் தெரிவித்தார்.