10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் | முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா | ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா? | ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன் | சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர் | விஜய் , சிம்பு குறித்து பகிர்ந்த சீமான் | அல்லு அர்ஜுன் பற்றிய பேச்சு: வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட காவேரி பரூவா | தேர்தலுக்குப் பிறகுதான் 'ஜனநாயகன்': உறுதி செய்கிறதா 'கில்லி, தெறி' ரீரிலீஸ் |

தமிழில் ஜெயம் ரவி முதன்முதலாக அவரது அண்ணன் இயக்கத்தில் அறிமுகமான ஜெயம் படத்திற்கு இசையமைத்தவர் தெலுங்கு இசையமைப்பாளர் ஆர்பி பட்நாயக். இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தவர், அடுத்ததாக தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகளை பெறவில்லை. அதேசமயம் தெலுங்கில் பிஸியான இசையமைப்பாளராக வலம்வந்த இவர் 2008ல் அந்தமைனா மனசுலோ என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதை தொடர்ந்து இசையமைப்பாளர், இயக்குனர் என இரட்டை குதிரை சவாரி செய்த அவர் மொத்தம் ஏழு படங்களை இதுவரை இயக்கியுள்ளார்.
கடைசியாக 2016ல் வெளியான மனலோ ஒக்கடு என்கிற படத்தை இயக்கியவர், தற்போது மீண்டும் டைரக்ஷனில் இறங்கி ஒரு படத்தையும் இயக்கி முடித்து விட்டார் 'காபி வித் ஏ கில்லர்' டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரை பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டைரக்ஷனை கவனித்துள்ளதுடன் படத்துக்கு ஆர்.பி பட்நாயக்கே இசையமைத்தும் உள்ளார்




