'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
துளு மொழி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரச்சனா ராய். தேசிய பேட்மிட்டன் வீராங்கணையான இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். சிக்கன் புளியோகரா என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தை ஷங்கர் ராமன் இயக்குகிறார்.
கன்னடத்தில் நடிப்பது குறித்து ரச்சனா கூறியதாவது: எனது முதல் கன்னட படத்திலேயே இவ்வளவு அருமையான டீமுடன் பணியாற்றியது பாக்கியம். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரியும் பெண்ணாக நடிக்கிறேன். காதல் ஒரு பெண்ணிடம் உளவியல் ரீதியாக எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
நான் ஒரு விளையாட்டு வீராங்கணையாக இருந்தாலும் சின்ன வயதில் இருந்தே நடிப்பு மிகவும் பிடிக்கும். பள்ளி, கல்லூரி காலங்களில் நாடகங்களில் நடித்த அனுபவம் இப்போது கைகொடுக்கிறது. இந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. என்கிறார் ரச்சனா.