ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
பொதுவாகவே சினிமா பிரபலங்கள் தாங்கள் ஏற்கனவே அணிந்த ஆடைகளை மீண்டும் பொது இடங்களில் அணிந்து வருவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் சமீபகாலமாக தங்களுக்கு பிடித்தமான, மனதுக்கு நெருக்கமான பழைய ஆடைகளை இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி ஆல்ட்ரேஷன் செய்து விழாக்களில் அணியும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக துவங்கியுள்ளது.
இந்த விஷயத்தை பின்பற்றி வரும் சமந்தா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே ஆகிய பிரபலங்களின் பட்டியலில் தற்போது ராம்சரணின் மனைவி உபாசனாவும் சேர்ந்துள்ளார். கடந்த சில தினங்களாக அவரது சகோதரியின் திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்பது வருடங்களுக்கு முன் தனது திருமண நிகழ்வின்போது தான் அணிந்திருந்த லெஹங்கா உடை ஒன்றை, இப்போதைய டிரெண்டிங்கிற்கு மாற்றி வடிவமைத்து, அதை அணிந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், உபாசனா. பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணா இதை வடிவமைத்து கொடுத்துள்ளார்.