'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது தாயின் வழியிலேயே நடிப்பில் இறங்கிவிட்டார். கடந்த வருடம் அவர் நடிப்பில் குஞ்சன் சக்சேனா என்கிற படம் வெளியானது. இந்த நிலையில், தமிழில் கடந்த 2018ல் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆர்வமில்லையா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டுமே அதுபற்றி பரிசீலிப்பேன் என கூறியுள்ளார். மேலும் தெனிந்திய மொழிகளில் மலையாள படங்கள் தன்னை அதிகம் கவர்ந்துள்ளதாக கூறியுள்ள ஜான்வி, சமீபத்தில் ட்ரான்ஸ் என்கிற படத்தை பார்த்ததாகவும் அதில் பஹத் பாசிலின் நடிப்பு சூப்பராக இருந்தது என்றும் கூறியுள்ளார். அதனால் மலையாள படங்களில் நடிக்க தனி ஆர்வம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.