நான் தவறான ஒருவரை திருமணம் செய்துவிட்டேன் : பிரதீப் ஆண்டனி
செப் 02, 20261
Advertisement
வாழ், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரதீப் ஆண்டனி. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பாதியில் வெளியேற்றப்பட்டார். 2024-ல் பூஜாவை திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இவர் தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ‛‛இந்தக் குழந்தையை விற்றுவிடலாம் என்று பலமுறை விளையாட்டாக என் நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். காரணம் குழந்தையை வளர்க்கும் அளவுக்கு நான் பக்குவமானவன் அல்ல என ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் குழந்தை பிறந்தபிறகு அதன் மீது மிகுந்த பாசம் ஏற்பட்டது. குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்த கடைசி தருணத்தை நினைத்து வருந்தினேன். ஒரு மாதத்திற்கு முன்பே குழந்தையை விட்டுப் பிரிந்துவிட்டேன். நல்ல குடும்பத்தை உருவாக்கி, சிறந்த தந்தையாக இருக்க வேண்டும் என்ற தனது கனவு தோல்வி அடைந்துவிட்டது.
நான் தவறான ஒருவரை திருமணம் செய்துவிட்டேன். இருவரின் வாழ்க்கை முறையும் எண்ணங்களும் முற்றிலும் மாறுபட்டதால் தினமும் மோதல்கள் ஏற்பட்டன. கடந்த உறவால் ஏற்பட்ட பலவீனத்தில் அன்பைத் தேடியதே இந்தத் திருமணத்திற்கு காரணம். இந்த உறவில் மூச்சுக்கூட விட முடியவில்லை என்பதால் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். இன்று அந்த குழந்தைக்கு என்னால் ஒரு பெயர்கூட வைக்க முடியவில்லை. நான் என்றும் ஒரு அநாதை தான் என்ற சாபத்தை ஏற்றுக் கொள்கிறேன்"" என தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்கணவன் மனைவிக்குள் ஆயிரம் மனக்கசப்புகள் எல்லோர் குடும்பத்திலும் ஏற்படும், அதற்காக பெரும்பாலான எவரும் கட்டிய மனைவியையும், குழந்தையையும் நடுத்தெருவில் விட்டு செல்லமாட்டார்கள், தான் செய்த இந்த மட்டமான செயலை நியாயப்படுத்தி எப்படியெல்லாம் டயலாக் பேசுகிறான். கொடுமை.