அல்லு அர்ஜுன், லோகேஷ் படத்திற்கு இசையமைக்க அனிருத் சம்பளம் எவ்வளவு
செப் 02, 2026
Advertisement
தமிழில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் 2 மற்றும் தர்மன் படங்களை தொடர்ந்து அரசன், கிங், தி பாரடைஸ், டேர் டெவில் உள்ளிட்ட பல மெகா படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 23 வது படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைக்க 23 கோடி ரூபாய் அனிருத் சம்பள பேசி இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் அறிவிப்பு டீசர் மற்றும் தீம் மியூசிக் இணையத்தில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் குறுகிய நாட்களில் லட்சக்கணக்கான ரீல்ஸ்களுக்கு இந்த பாடல் பயன்படுத்தப்பட்டு புதிய சாதனை படைத்தது. அதோடு, பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் இந்த ஏஏ 23 படத்திற்காக அனிருத் உருவாக்கிய தீம் பாடலை பயன்படுத்தியது இன்னும் பெரிய அளவில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்பது குறிப்பிடப்பட்டது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!