2 ஹீரோ, ஹீரோயின்கள் அறிமுகமாகும் காதல் படம்
செப் 02, 2026
Advertisement
பொதுநலன் கருதி, சமூக விரோதி படங்களை இயக்கிய சீயோன் ராஜா அடுத்து காதல் படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பெஸ்டி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இப்படத்தில் ரோஷன் மற்றும் சபரி கணேஷ் கதாநாயகர்களாகவும், அஸ்மிதா மற்றும் வர்ணா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். மேலும் ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சுஜாதா, மஸ்காரா அஸ்மிதா, கஞ்சா கருப்பு, லொள்ளு சபா சுவாமிநாதன், மற்றும் சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். வினோத் பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். விக்னேஷ் ராஜா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது “இன்றைய ஜென்-ஸி தலைமுறையை மையமாகக் கொண்டு உருவாகும் படம். இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை முறை, நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது.
நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் விஷயங்கள் எல்லாமே சாதாரணமானவைதான். ஆனால் சரியான மனிதர்கள் ஒன்று சேர்ந்து, சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாக திரும்பும்போது அந்த சாதாரண விஷயங்களே செம கலாட்டாவாக மாறிவிடும். அப்படிப்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு, நட்பு, காதல், குடும்ப உறவுகள், என ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணையும் கதையாக இப்படம் உருவாகிறது” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!