பிளாஷ்பேக் : நீச்சல் குளத்தில் படமான பாடல் காட்சி
செப் 02, 2026
Advertisement
கருப்பு, வெள்ளை காலத்தில் பாடல் காட்சிகள் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக புதிதாக எதையாது செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் அவற்றில் பல கருப்பு வெள்ளை என்பதால் பார்வையாளர்களுக்கு தெரியாமலேயே போனது. இதனால் பீம்சிங் தான் இயக்கிய "படித்தால் மட்டும் போதுமா" படத்தில் ஒரு பாடலை புதுமையாக படமாக்க விரும்பினார்.
அண்ணன், தம்பி பார்த்த பெண்ணை பற்றிய உரையாடலாக இந்த பாடல் அமைந்தது. "பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா? என்னென்று நான் சொல்ல வேண்டுமா" என்ற பாடல் மூலம் அண்ணனும், தம்பியும் உரையாடிக் கொள்வார்கள். அண்ணனுக்காக டி.எம்.சவுந்தர்ராஜனும், தம்பிக்காக பி.பி.ஸ்ரீனிவாசும் பாடினார்கள். அண்ணனாக சிவாஜி, தம்பியாக பாலாஜி நடித்தனர். இருவருமே ஒரு வித வெட்கத்தோடு பாடுவதுதான் படத்தின் சிறப்பு.
இந்த பாடலை ஒரு பூங்காவில் இருவரும் பாடுவதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பீம்சிங் அதை மாற்றி இருவரும் ஒரு நீச்சல் குளத்தில் நீச்சலடித்தபடியே பாடுவதாக அமைத்தார். சென்னை ஒய்எம்சிஏவில் இருந்த நீச்சல் குளத்தில் படமானது. பாடலும், காட்சியும் பெரிய வரவேற்பை பெற்றது. பாடலுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். இந்தப்படம் சிவாஜி கணேசனுக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது. இத்திரைப்படம் வங்காள மொழித் திரைப்படமான "நா" வின் தழுவலாகும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!