Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

முத்து நகரம்

முத்து நகரம்,Muthunagaram
  • முத்து நகரம்
  • ..
  • ..
  • இயக்குனர்: ஒட்டபிடாரம் கே.திருப்பதி
25 அக், 2013 - 16:40 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » முத்து நகரம்

   நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com

  
ஹீரோ ஒரு ஆட்டோ டிரைவர் . அவருக்கு 4 நண்பர்கள். அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், ஹீரோவோட நண்பர் ஒருவரை, தவறுதலா ஒரு கேஸ்ல சந்தேகப்பட்டு லாக்கப் ல லைட்டா 2 தட்டு தட்டிடறாரு , அப்பவே உண்மையான திருடன் கிடைச்சுட்டதால நண்பரை ரிலீஸ் பண்ணிடறாரு , ஆனா நண்பர்களுக்கு செம கடுப்பு , எப்படியாவது இந்த இன்ஸ்பெக்டரை பழி வாங்கனும்னு ஐடியா பண்றாங்க.

ஒரு நாள் நைட் டைம்ல இன்ஸ்பெக்டர் வீட்டுல கன்னம் வெச்சு அவர் ரிவால்வரை திருடி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல புதைச்சு வெச்சுடறாங்க .ரிவால்வர் களவு போனதால இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் பண்ணிடறாங்க . அவரு திருடனை கண்டு பிடிக்க அலையோ அலைனு அலையறாரு .

இப்போ ஒரு ட்விஸ்ட் . இன்ஸ்பெக்டரோட ரிவால்வரால ஊர்ல 3 கொலை நடக்குது , சுட்டது யார்னு தெரியல .நண்பர்களுக்குள்ளேயே சந்தேகம். யார் அந்தக்கொலைகளை செஞ்சது ? ஏன் ? எதுக்கு ? எப்படி? என்று விளக்குவதே மிச்ச மீதிக்கதை.

இப்போ நான் சொன்ன கதையை இப்படியே நேரடியா சொல்லி இருந்தா படம் ஹிட் ஆகி இருக்கும் , நம்மாளுங்க யாரு ? இந்தக்கதையை தேவையே இல்லாம குழப்பி 3 டிராக் ல கதை சொல்றாங்க .

ஹீரோ ஒரு பொண்ணை லவ்வறாரு , அவரோட அப்பா ஹீரோவைக்கொல்ல தாதா உதவியை நாடறாரு .அந்த தாதாவோட ஆள் தான் ஊர் இன்ஸ்பெக்டர் . கதைக்கு சம்பந்தமே இல்லாம அந்த தாதா பண்ற கொலைகள், ரவுடித்தனம்னு ஒரு டிராக்ல ஒண்ணுமே புரியாம கதை நகருது .
இன்னொரு டிராக்ல ஹீரோவோட நண்பரோட அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம ஆபரேஷன் பண்றாங்க , அதுக்கு பணம் வேணும்.

இந்த 3 தனித்தனிக்கதையை இணைக்க படாத பாடு பட்டிருக்காங்க. நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு - நடிச்சிருக்காங்க . எல்லார் நடிப்பும் சராசரிக்கும் கீழே . எல்லாரும் அதாவது 5 பேரும் ஒரு சீன்ல கூட தலைக்கு எண்ணெய் வெச்சு சீவி நான் பார்க்கலை , எதுக்கு பரட்டைத்தலை , தாடி யோட அலையறாங்கனு தெரியலை , பாதி நேரம் டாஸ்மாக்கே கதின்னு கிடக்காங்க . முடியல

நாயகியாக அஸ்ரிக். படத்துலயே ஒரே ஒரு ஆறுதல் நாயகிதான் . லட்சணமான முக அமைப்பு . மிக அழகாக வந்து போகிறார் .நல்ல வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.

கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நந்தா சரவணன், காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன், பூவிதா, செவ்வாழைராஜி, கவிதாபாலாஜி, மது, ஸ்ரீகவி அப்டினு ஏகப்பட்ட கூட்டம் படத்துல.
கஞ்சாகருப்பு -முத்துக்காளை கூட சேர்ந்து காமெடி டிராக் அப்டிங்கற பேர்ல என்னென்னெமோ பண்றார். லோ கிளாஸ் சி செண்ட்டர் ஆடியன்ஸ் கூட சிரிக்கலை. செம கடுப்பு .

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

* படத்தோட போஸ்டர் டிசைன் ல ரியலி எ க்ரைம் ஸ்டோரி அப்டினு கேப்ஷன் போட்டு ஏமாத்துனது

* தீபாவளிக்கு 6 நாள் முன்னால ரிலீஸ் பண்ணினா வேற வழி இல்லாம , வேற படம் இல்லாம எப்படியும் ஆடியன்ஸ் வந்துடுவாங்கனு நம்பி அனிருத் கேப்ல படத்தை விட்டது.

* ஓபனிங்க் சாங்க் , ஒரு கரகாட்ட குத்தாட்டப்பாட்டு நல்ல டான்ஸ் மூவ்மெண்ட்டோட படமாக்கிய்து


மனம் கவர்ந்த வசனங்கள்

* சரக்குக்கு எப்போ எல்லாம் தட்டுப்பாடு வருதோ அப்பவெல்லாம் வேலைக்குப்போவான்

* உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கோம் மாப்ளை
உனக்கு வேற வேலையே இல்லையா?
என் வேலையே அதானே?

* காதலுக்காக தாஜ்மகால் கட்டுன ஷாஜகான் இப்போ உயிரோட இருந்தா இவன் பண்ற காதலைப்பார்த்து இவனை உயிரோட சமாதி கட்டிட்டுத்தான் மத்த வேலை பார்ப்பார்

* உன்னைச்சுத்தி ஒளி வட்டம் தெரியுது
வெய்யில் ஜாஸ்தியா இருக்கில்ல?

* நெம்பர் 2 பிஸ்னெசை செஞ்சா நீ நெம்பர் 1-னா வரலாம்

* போட்டி போட்டுட்டு தொழில் பண்ணலாம் , ஆனா போட்டுக்குடுத்து தொழில் பண்ணக்கூடாது

* நான் இந்த சேர் ல உக்காரலாமா?
அந்த சேர் கிட்டேயே கெளு

* போலீஸ்காரன் வீடா இருந்தாலும் பூட்டித்தான் வைக்கனும்

சி பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்க்க முடியாத, தியேட்டருக்குப்போனா செத்தாண்டா சேகரு



வாசகர் கருத்து (2)

s.sheikkader - thuvarankurichy  ( Posted via: Dinamalar Android App )
27 அக், 2013 - 18:19 Report Abuse
s.sheikkader விமர்சனம் செய்யட்டுங்க பரவாயில்ல. படம் முதல் சோ ஓடுனதுமே அக்கு வேறு ஆணி வேறா எழுதுறாரே, அது தான் எப்படினு புரியல.
Rate this:
King Ram - Meensurutty,இந்தியா
25 அக், 2013 - 18:04 Report Abuse
King  Ram நண்பா நீ என்ன சினிமா தியேட்டர்ல வேலை பார்க்குற ? எல்லா படத்துக்கும் விமர்சனம் செய்ய வந்துட்ட ???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in