தினமலர் விமர்சனம் » அம்மாவின் கைப்பேசி
தினமலர் விமர்சனம்
ஒரு நாவலைப் படமாக்கும்போது... வர்ணனைகள் ஒளி ஓவியங்களாக மாறி, உணர்ச்சிகள் கண்ணீர் காவியங்களாக மாறாமல் போனால், படம் “புஸ்வாணம்’ ஆகும். அம்மாவின் கைப்பேசி படமும் அப்படி ஆகிப் போனதே!
ஊரில் திருடி பிழைக்கும் உதவாக்கரை அண்ணாமலை (சாந்தனு பாக்யராஜ்), தன் மாமா பெண் செல்வியை (இனியா) கைப்பிடிக்கும் நோக்கத்தோடு திருந்தி வேலை பார்க்கும்போது, செய்யாத திருட்டிற்கு அவன் மீது பழி விழுகிறது. உறவும், ஊராரும் ஏச, ஊரை விட்டு ஓடுகிறான். இருக்கும் இடத்தை ஊருக்குத் தெரிவிக்காத காரணத்தால், உறவும், ஊர் சனமும் அண்ணாலையை இறந்தவன் ஆக்க, செல்விக்கு திருமணம் நடக்கிறது. இந்த சூழலில், அம்மாவுக்கு கைப்பேசியை அனுப்பி, தொடர்பு கொள்கிறான் அண்ணாமலை. ஊரில் அவனது விசுவாசத்திற்கு வீடு ஒன்றை முதலாளி கிரயம் செய்ய... எதிரிகளை சம்பாதிக்கிறான் அண்ணாமலை. அவனுக்கு என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ்.
சாந்தனு பாக்யராஜ் அப்பாவின் நடிப்பை வெளிப்படுத்த “முயற்சி’ செய்திருக்கிறார். இனியா அதிக ஒப்பனையால் செயற்கையாக தெரிகிறார். கையைக் கட்டினாலும் திருட்டுப் பழக்கம் போகாத பிரசாத்தாக, இயக்குனர் தங்கர் பச்சான... திரைக்கதையைப் போலவே அங்குமிங்கும் அலைகிறார். அவர் மனைவியாக வரும் மீனாள், வெளுத்து வாங்குகிறார். படத்தின் ஒரே நம்பிக்கை வரவு இசையமைப்பாளர் ரோகித் குல்கர்னி மட்டுமே!
செல்ல மகன்... சாதிக்கும் இளைஞனாக மாறும் “எவர்கிரீன்’ கதையை, கைப்பேசியால் திசை திருப்பி, வழி தடுமாறிப் போகச் செய்த தங்கர்பச்சான், தன் கையைச் சுட்டுக் கொண்டது போக, நம் பர்சையும் பதம் பார்க்கிறார்.
மொத்தத்தில் "அம்மாவின் கைப்பேசிக்கு சிக்னல் இல்லை
ரசிகன் குரல்: “அழகி’ படம் எடுத்தவரு! ஏன் இப்படி?ன்னு தெரியலை!------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
அம்மாவின் கைப்பேசி - பேலன்ஸ் இல்லை