Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நான் சிவனாகிறேன்

நான் சிவனாகிறேன்,Naan Sivanagiren
 • நான் சிவனாகிறேன்
 • உதய் கார்த்திக்
 • வர்ஷா
 • இயக்குனர்: வி.கே.ஞானசேகர்
20 நவ, 2011 - 16:10 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நான் சிவனாகிறேன்

தினமலர் விமர்சனம்படத்தின் ஹீரோ சைக்கோ. பைக்‌கோ, காரோ இல்லாத இவர் மீது ஹீரோயினுக்கோ லவ்வுங்கோ... எனும் லேட்டஸ்ட் தமிழ் சினிமா, சைக்காஜ் சப்ஜெக்டுகளுடன் அந்த காலத்து கமலின் சிகப்பு ரோஜாக்களையும், இந்த காலத்து தனுஷின் காதல் கொண்டேன் படத்தையும் கலந்து ‌கட்டி "நா சிவனாகிறேன்" என்றிருக்கிறார்கள்!

கதைப்படி ஹீரோ உதய் கார்த்திக், காதலனுக்கும், புருஷனுக்கும் துரோகம் செய்யும் 16 பெண்களை அடுத்தடுத்து தீர்த்துகட்டிவிட்டு, அங்கு இறந்த பெண்களின் இரத்தத்தால் "நான்" என ஆட்டோகிராப்பும் போட்டு வைத்து விட்டு வருகிறார். காவல்துறையும், கஷ்ட ஜீவனம் நடத்தும் இவர் மீது காதல் கொள்ளும் கதாநாயகியும் ஒருசேர இவர் தான் குற்றவாளி என தீர்மானித்து, தக்க சன்மானம், அதாங்க தண்டனை வழங்க களம் இறங்கும் வேலையில், அப்ரூவராக மாறும் சைக்கோ ஹீரோ உதய், தான் தடம் மாறிய பெண்களை கொலை செய்யக்காரணம், தன் தாய் என கோர்ட்டில் மீடியாக்களை கூட்டி வைத்து கொந்தளிக்கிறார்! கூடவே தான் "சிவன்", தப்பு செய்யும் பெண்களை தீர்த்து கட்ட தனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கிறது என்று சிவனாட்டம் போடும், ஹீரோவின் தாய் செய்த தவறென்ன? ஹீரோவிற்கு தரப்பட்ட தண்டனை என்ன...? என்பது தான் "நா சிவனாகிறேன்" படத்தின் மொத்த கதையும்!

ஹீரோ உதய் கார்த்திக், பாம்பும், கையுமாக தரும் பரமசிவன் போஸ் மாதிரியே, அவரது நடிப்பும் ஓ.கே. அதற்காக அவர் பண்ணும் கொலைகள் எல்லாம் ரொம்ப ஓவர். ஹீரோயின் வர்ஷா, அப்பா பிரேம்குமார், தடம்மாறிடும் தாயாக வரும் நயானி தீட்சித் உள்ளிட்ட எல்லோரும் பார்த்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!

கே.கோகுலின் ஒளிப்பதிவு, கே.எஸ்.ம‌னோஜின் இசை இரண்டும், வி.கே.ஞானசேகரின் இயக்கத்திற்கு பக்கபலம் என்றாலும், படத்தில் நிறைய பலவீனங்கள் தென்படுவது மைனஸ்.

சைக்கோ உதய் மீது ஹீரோயின் வர்ஷாவுக்கு காதல் வருவது எப்படி? என்பது உள்ளிட்ட இன்னும் பல லாஜிக் மிஸ்டேக் கேள்வி‌களை கேட்காமல் போனால் "நா சிவனாகிறேன்" - படத்தை "சிவனேனு" பார்த்துவிட்டு வரலாம்!வாசகர் கருத்து (9)

விஜய் - bangalore,இந்தியா
10 டிச, 2011 - 21:45 Report Abuse
 விஜய் மிக மிக சூப்பரான மொக்கை படம். கொஞ்சம்குட லாஜிக் இல்லாத ஸ்க்ரீன்ப்ளே
Rate this:
அசோக்ராஜ்.ப.ம - jayankondam,இந்தியா
01 டிச, 2011 - 19:46 Report Abuse
 அசோக்ராஜ்.ப.ம இன்றைக்கு உலகில் நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய குற்றத்தை கதையாக எடுக்க துணிந்ததற்காகவே டிறேக்டோருக்கு சபாஷ்.படம் நன்று.ஆனால் ஹீரோ காதல் கொண்டேன் தனுஷ் அண்ட் கற்றது தமிழ் ஜீவா வின் நடிப்பை அப்படியே பின் பற்றியிருப்பது தான் கொஞ்சம் நெருடல்.குறிப்பாக அனைத்து பாடல்களும் மிக அருமை.நான் வித்தியாசமான படங்களை விரும்புவதால் இந்த படம் எனக்கு பிடித்து இருக்கிறது
Rate this:
mansur.t - dubai,இந்தியா
29 நவ, 2011 - 17:23 Report Abuse
 mansur.t best picture in 2011 very good movie
Rate this:
martin - chennai,இந்தியா
27 நவ, 2011 - 15:00 Report Abuse
 martin Nalla padam. Super.
Rate this:
saranya - melbourne,ஆஸ்திரேலியா
26 நவ, 2011 - 13:08 Report Abuse
 saranya i would like 2 say one think that nowadays d movies r very violent... if children see dis, they may learn it.... pls put "v" if a movie s violent... like eng movies... it helps 2 avoid see this type of movies who don't like it.... pls consider it...
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in