2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பூர்வா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பிரசாத் ராமர்
இசை - பிரதீப் குமார்
நடிப்பு - செந்தூர்பாண்டியன், ப்ரீத்தி கரண்
வெளியான தேதி - 8 மார்ச் 2024
நேரம் - 1 மணிநேரம் 55 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
குறிப்பு - 'ஏ' சான்றிதழ் திரைப்படம்

சமூக வலைத்தள யுகத்தில் சில ஆண்களும், பெண்களும் எப்படி இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டியிருக்கும் ஒரு படம். இயக்குனர் பிரசாத் ராமர் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தரக் கூடாது, நேரடியாகப் பார்ப்பது போல இருக்க வேண்டும் என படம் முழுவதையுமே 'கேன்டிட்' படம் போல எடுத்திருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். பெண்களுடன் ஊரைச் சுற்றுவது அவருக்கு ரொம்பவே பிடிக்கும். மாயவரத்தில் உள்ள தன்னுடைய பேஸ்புக் தோழியான ப்ரீத்தி கரணின் பிறந்தநாளில் அவரை சந்திக்க ஒரு 'திட்டத்துடன்' நண்பனுடன் பைக்கிலேயே செல்கிறார். மாயவரம் சென்ற பின் அவரும், ப்ரீத்தியும் மட்டும் பூம்புகாருக்கு பைக்கில் செல்கிறார்கள். தன்னுடைய அந்த 'திட்டத்தை' எப்படியாவது முடித்துவிட வேண்டும் என துடிக்கிறார் செந்தூர்பாண்டியன். அதைப் பற்றி புரிந்து கொண்ட ப்ரீத்தி அவருக்குத் தகுந்த பாடத்தைக் கற்றுத் தருகிறார். இதுதான் படத்தின் கதை.

படத்தில் மொத்தமாக மூன்று முக்கிய கதாபாத்திரங்கள்தான். படத்தின் நாயகன் செந்தூர் பாண்டியன், நாயகி ப்ரீத்தி கரண், நாயகனின் நண்பன் சுரேஷ் மதியழகன். யாரையுமே நடிக்க வேண்டாம் என இயக்குனர் சொல்லிவிட்டு, அந்தந்த கதாபாத்திரமாகவே அவர்களைக் காட்ட வேண்டும் என நினைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மூவருமே இயல்பாக அந்த கதாபாத்திரங்களில் செட் ஆகியிருக்கிறார்கள். அதற்கான வசனங்களும் சரியாக சேர்ந்திருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் பிரதீப்குமார் தான் படத்தின் இசையமைப்பாளர். அப்படி, இப்படியான காட்சிகளுக்கு தனது இசையிலும் குறும்புத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.

படத்தின் பெரும்பகுதி செந்தூர், ப்ரீத்தி இருவருமே பைக்கில் செல்வதிலேயே போகிறது. 'கேன்டிட்' காட்சியாக முழு படத்தையுமே ஒளிப்பதிவு செய்துள்ளார் உதய் தங்கவேல். ஒரு விதத்தில் அது ரசிப்பதாக இருந்தாலும் ஒரு சினிமா பார்க்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தாமல் இருக்கிறது. ஒரு யு டியூப் வீடியோ அல்லது ஷார்ட்பிலிம் பார்க்கும் உணர்வையே தருகிறது. 'டிஐ' கூட செய்திருப்பார்களா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. மேக்கிங்கில் தரத்தைக் கூட்டியிருக்க வேண்டும். இப்படியும் ஒரு படத்தை எடுக்கலாமோ என்ற கேள்வியைத் தடுக்க முடியவில்லை.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும்…

 

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓