தக்ஸ்,Thugs
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எச்ஆர் பிக்சர்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ்
இயக்கம் - பிருந்தா
இசை - சாம்சிஎஸ்
நடிப்பு - ஹிரிது ஹரூன், அனஸ்வரா ராஜன், சிம்ஹா
வெளியான தேதி - 24 பிப்ரவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

மலையாளத்தில் 2018ம் ஆண்டு வெளிவந்த 'ஸ்வாதன்த்ரியம் அர்த்தராத்ரியில்' என்ற படத்தின் ரீமேக் தான் இந்த 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்'.

நடன இயக்குனர் பிருந்தா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. படத்தின் கதாநாயகனாக ஹிரிது ஹரூன், கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ஹா, ஆர்கே சுரேஷ், முனிஷ்காந்த் நடித்திருக்கிறார்கள்.

ஒரு சிறைக்குள் இருந்து சில கைதிகள் தப்பிக்க திட்டம் போடுகிறார்கள். அவர்கள் நினைத்தபடி தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஹிரிது ஹரூன், தனது காதலி அனஸ்வராவுக்குத் தொல்லை கொடுத்த ஒருவனைக் கொலை செய்கிறார். அதனால், கைதாகி சிறைக்கு வருகிறார். சிறையிலிருந்து தப்பித்து தனது காதலியுடன் எப்படியாவது வெளிநாட்டிற்குப் போய்விட வேண்டும் என்பது அவரது ஆசை. சிறையில் தன்னுடன் தங்கியிருக்கும் சிம்ஹா, முனிஷ்காந்த் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சுரங்கம் வெட்டி தப்பிக்க முயல்கிறார்கள். அவர்கள் சிறையிலிருந்து தப்பித்தார்களா, இல்லை மாட்டிக் கொண்டார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முழு படமும் ஒரே சிறைக்குள்ளேயே நடக்கிறது. இதற்காக ஒரு சிறைச்சாலை செட் அமைத்திருக்கிறார்கள். மாவட்ட சிறைச்சாலை என்றாலும் இவ்வளவு சிறியதாகவா இருக்கும். அதிகபட்சமாக 100 கைதிகள் இருக்கும் சிறைச்சாலையில், கண்டிப்பான சிறை அதிகாரி இருந்தும் ஒரு சுரங்கத்தை இவ்வளவு எளிதாகத் தோண்ட முடியுமா என்பது சந்தேகம்தான். நம்பும்படியான காட்சிகள் இல்லாததால் படத்துடன் நம்மால் ஒன்ற முடியவில்லை.

ஹிரிது ஹரூன், அனஸ்வரா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள், சிம்ஹா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளை சுருக்கமாக முடித்ததற்குப் பாராட்ட வேண்டும். ஹிரிது ஹரூன் அறிமுக நடிகர் போல இல்லாமல் கதாபாத்திரத்திற்கேற்றபடி இயல்பாக நடித்திருக்கிறார். அவரது காதலியாக அனஸ்வரா ராஜன். சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். சிறையில் உள்ள கொலைக் கைதியாக சிம்ஹா. ஹிரிதுவின் தப்பிக்கும் யோசனையை ஏற்றுக் கொண்டு அது செயல்பட முக்கிய காரணமாக இருக்கிறார். சிறை சூப்பிரண்டன்டாக ஆர்கே சுரேஷ், கண்டிப்பான அதிகாரியாக நடித்திருக்கிறார்.

படத்தில் பல இரவு நேரக் காட்சிகள் இருக்கிறது. ஒரே சிறை, சிறைக்குள் அடிக்கடி காட்டப்படும் ஒரே செல் என இருந்தாலும் லைட்டிங், கேமரா கோணம் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி. சண்டைக் காட்சிகள் சினிமாவுக்கான சண்டைக் காட்சிகள் போல இல்லாமல் இயல்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாம் சிஎஸ் பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான்.

சிறையிலிருந்து தப்பிக்க சிலர் நினைக்கிறார்கள். அதற்காக சுரங்கம் தோண்டுகிறார்கள் என்றால் காட்சிக்குக் காட்சி நமக்கு ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ள வேண்டும். கிளைமாக்ஸ் முன்பு வரை கைதிகள் சுரங்கம் தோண்டுவது சிறைத் துறை அதிகாரிகள் யாருக்குமே, எந்த விதத்திலும் தெரிய வரவில்லை என்பதால் எந்த பரபரப்பும் இல்லாமல் போய்விடுகிறது. கிளைமாக்சிலாவது ஏதாவது ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கலாம், ஆனால், அப்படி எதையும் வைக்கவில்லை.

தக்ஸ் - லைக்ஸ் அள்ளாது…

 

தக்ஸ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தக்ஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓