Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மகான் கணக்கு

மகான் கணக்கு,Mahan Kanakku
  • மகான் கணக்கு
  • ரமணா
  • ரிச்சா சின்ஹா
  • இயக்குனர்: சம்பத் ஆறுமுகம்
05 ஜன, 2012 - 15:55 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மகான் கணக்கு

தினமலர் விமர்சனம்



கொள்ளை லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட தனியார் வங்கிகளின் வட்டி தகிடுதித்தங்களை சரமாரியாக சாடி, சரியான சவுக்கடி கொடுத்திருக்கும் தரமான திரைப்படம் தான் "மகான் கணக்கு!"

அக்கா வீட்டில் அடைக்கலம் புகுந்து பொறுப்பாக படித்து வரும் ரமணா மீது அன்பை பொழிகின்றனர், அக்கா தேவதர்ஷினியும், அக்கா புருஷன் ஸ்ரீநாத்தும். அதைவிட இரு மடங்கு அன்பை அவர்களது குட்டி-சுட்டி மகள் கரோலின் கிருத்திகா மீது பொழிகிறார் ரமணா! இப்படி அன்பே உருவான குடும்பத்தில், புயலாய் பாதிப்பை ஏற்படுத்துகிறது கல்லூரி பேராசிரியரான ஸ்ரீநாத், ரமணாவின் படிப்பிற்காக வாங்கிய தனியார் வங்கி கடன் ஒன்று! அது எது மாதிரியான பாதிப்பு? அதனால் வெகுண்டெழும் ரமணா என்னவெல்லாம் செய்கிறார்...? எப்படியெல்லாம் அதுமாதிரி மனித உயிரை துச்சமாய் மதித்து கொள்ளை லாப குறிக்கோள் கொண்ட, தனியார் வங்கிகளுக்கு பாடம் புகட்டுகிறார் என்பது மகான் கணக்கு படத்தின் புத்திசாலித்தனமான மீதிக்கணக்கு, கதை, இத்யாதி.. இத்யாதி.... எல்லாம்!

ஜாலியான கல்லூரி மாணவராகவும், அக்கா குடும்பம் அழியக்காரணமான வங்கியை சாணக்யத்தனமாக பழிவாங்கும் ஆக்ரோஷமான ஹீரோவாகவும் அசத்தலாக அம்சமாக நடித்திருக்கிறார் ரமணா. எண்ணற்ற படங்களில் இதுநாள் வரை நடித்திருந்தாலும், சரியான ஓர் இடம் கிடைக்காமல் இருந்து வந்த ரமணாவுக்கு இந்தபடம் சரியான ஓர் இடத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி தந்துள்ளதென்றால் மிகையல்ல!

பேபி கரோலின் கிருத்திகாவிடம் ‌பாசம்காட்டும் அளவுகூட கதாநாயகி ரிச்சா சின்ஹாவிடம், ஹீரோ ரமணா காதல் காட்டாததும் ரிச்சா நடிப்பு - அவிழ்ப்பு இரண்டையுமே செய்யாதது சலிப்பு! ஓ.சி.ஓ.சி., வங்கியின் குளோபல் அதிகாரியாக வரும் சரவண சுப்பையா (சிட்டிசன் இயக்குநர்) வக்கீலாக வரும் சி.ஆர்.பாஸ்கரன், ஷர்மிளா, தேவதர்ஷினி, ஸ்ரீநாத், லொள்ளு சபா ஜீவா, எடிட்டர் சுரேஷ் அர்ஸ் உள்ளிட்டவர்கள் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருப்பது படத்தின் பெரிய பலம். அன்னா ஹசாரே இடம் பெறும் க்ளைமாக்ஸ் காட்சியும் பிரமாதம்.

காதல், மோதல் கதைகளால் வெறுத்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, சமூக பிரச்னை ஒன்றை சுவாரஸ்யமாக சொல்லி அதற்கு சரியான தீர்வையும் தந்திருக்கும் இயக்குநர் சம்பத் ஆறுமுகம் பாராட்டுதலுக்குரியவர். அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கும் ஒளிப்பதிவாளர் எஸ்.கார்த்திக், இசையமைப்பாளர் ஏ.கே.ரிஹால் சாய் உள்ளிட்ட மகான் கணக்கு டெக்னீஷியன்கள் புரடியூசர்கள் ஒவ்‌வொருத்தருக்கும் தனித்தனியாக ஹேட்ஸ் ஆப் சொல்லி பாராட்டலாம்!

மொத்தத்தில் "மகான் கணக்கு", "மலைக்க வைக்கும் கணக்கு!"



வாசகர் கருத்து (5)

ariaravind - tirupur,இந்தியா
27 ஜன, 2012 - 13:43 Report Abuse
 ariaravind நல்ல படம் தான்.. ஆனா பார்க்க முடியல
Rate this:
rajagopal - chennai,இந்தியா
21 ஜன, 2012 - 20:32 Report Abuse
 rajagopal verygood
Rate this:
DHANIKA - SALEM,இந்தியா
11 ஜன, 2012 - 15:00 Report Abuse
 DHANIKA GOOD
Rate this:
SANTILYEN - tiruttani,இந்தியா
07 ஜன, 2012 - 11:06 Report Abuse
 SANTILYEN மகான் கணக்கு - வங்கி கொள்ளையர்களுக்கான சாட்டை அடி. இனியாவது மக்களும், வங்கிகளும் திருந்தினால் சரி..........
Rate this:
மொத்தத்தில் "மகான் கணக்கு", "மலைக்க வ - மொத்தத்தில் "மகான் கணக்கு", "மலை,இந்தியா
06 ஜன, 2012 - 13:33 Report Abuse
 மொத்தத்தில் மொத்தத்தில் "மகான் கணக்கு", "மலைக்க வைக்கும் கணக்கு!"
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in