மெய்,Mei

மெய் - பட காட்சிகள் ↓

மெய் - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ்
தயாரிப்பு - சுந்தரம் புரொடக்ஷன்1
இயக்கம் - எஸ்ஏ பாஸ்கரன்
இசை - பிருத்விகுமார், அனில் ஜான்சன்
வெளியான தேதி - 23 ஆகஸ்ட் 2019
நேரம் - 1 மணி நேரம் 51 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் அடிக்கடி வருவதுண்டு. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் மெய்.

என்னை அறிந்தால், காக்கி சட்டை படங்களின் வரிசையில் மெடிக்கல் கிரைம் பற்றிய படம்தான் இதுவும். அந்தப் படங்களில் நாயகர்கள் காக்கி சட்டை போட்டுக் கொண்டு வில்லனைக் கண்டுபிடித்து அழிக்கிறார்கள். அதை இந்தப் படத்தில் ஒரு டாக்டரே செய்கிறார்.

அறிமுக இயக்குனர் எஸ்ஏ பாஸ்கரன் தொய்வில்லாத திரைக்கதையில் ஒரு பரபரப்பான படமாகத்தான் இந்தப் படத்தையும் கொடுத்திருக்கிறார். இருப்பினும் இதற்கு முன்பே நாம் பார்த்த கதை என்பதால் அடுத்து இப்படித்தான் கதை நகரும் என்பதை நம்மால் யூகிக்க முடிவது படத்திற்கு மைனஸ் பாயின்டாக இருக்கிறது.

அம்மா இறந்த துக்கம் தாளாமல், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகிறார் டாக்டருக்குப் படித்த நிக்கி சுந்தரம். ஆனால், தன்னை டாக்டர் என காட்டிக் கொள்ளாமல் அப்பாவின் நண்பருடன் தங்கி அவரது மருந்துக் கடையைப் பார்த்துக் கொள்கிறார். கடையில் வேலை பார்க்கும் ஒருவர் மருத்துவமனையில் திடீரென இறந்து போகிறார். அதற்கான பழி நிக்கி சுந்தரம் மீது விழுகிறது. அந்த மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பது நிக்கிக்கு புரிகிறது. அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் உதவியுடன் களமிறங்குகிறார். அதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நிக்கி சுந்தரம் இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்பதால் நடிக்க முயற்சித்திருக்கிறார். எப்போதுமே ஒரு சோகத்தில் இருப்பது போலவே முகத்தை வைத்துக் கொள்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்த்த பிறகாவது அடிக்கடி சிரிக்க ஆரம்பித்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் மெடிக்கல் ரெப்பாக முதல் முறையாக ஒரு நாயகியின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கதைக்குத் தேவைப்படும் என்பதால் அந்தக் கதாபாத்திரம் போலிருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை ஐஸ்வர்யா ராஜேஷ்.

வில்லன்களாக இரண்டு டாக்டர்கள், இரண்டு போலீஸ், ஒரு ஹாஸ்பிட்டல் முதலாளி என ஒரு கூட்டணியை வைத்திருக்கிறார்கள். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கிஷோர், சப் இன்ஸ்பெக்டராக வரும் அஜய் கோஷ் இருவருக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். கிஷோர் கதாபாத்திரம் பற்றிய திருப்பம் எதிர்பாராத ஒன்று. இருந்தாலும் அவருக்குத் தெரியாமல் நடந்த ஒரு விஷயத்தில் அவரையும் குற்றவாளி போல சித்தரிப்பது ஏற்புடையதல்ல.

பிருத்வி குமார் இசையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. அனில் ஜான்சன் பின்னணி இசை பரவாயில்லை.

மெய்யாக என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். இடைவேளை வரை சுவாரசியமாகவே படம் நகர்கிறது. அதன்பின் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் நாயகன் மீதான முக்கியத்துவம் குறைகிறது. அவரது கண்ணோட்டத்திலேயே படத்தை நகர்த்தியிருக்கலாம்.

மெய் - உண்மையே வெல்லும்

 

மெய் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மெய்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓