Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

புக்ரே ரிட்டர்ன்ஸ்

புக்ரே ரிட்டர்ன்ஸ்,Fukrey Returns
  • புக்ரே ரிட்டர்ன்ஸ்
  • இயக்குனர்: மிரிக்தீப் சிங் லம்பா
09 டிச, 2017 - 13:49 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » புக்ரே ரிட்டர்ன்ஸ்

நடிகர்கள் : புல்கிட் சாம்ராட், வருண் சர்மா, அலி பாசல், மனோஜ் சிங், ரிச்சா சத்தா, ப்ரியா ஆனந்த்,
இயக்கம் : மிர்க்தீப் சிங் லம்பா
தயாரிப்பு : பர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வாணி

2013-ம் ஆண்டு வெளிவந்த புக்ரே படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் இரண்டாம் பாகமாக வெளியாகி உள்ள கலகலப்பான படம் தான் புக்ரே ரிட்டர்ன்ஸ். இப்படம் ரசிகர்களை கலகலப்பாக்கியதா...? என்று இனி பார்ப்போம்...!

முதல்பாகம் முடிந்த இடத்திலிருந்து கதை துவங்குகிறது. போலி பஞ்சாபன் எனும் ரிச்சா சதா சிறை சென்றதால் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் ஹன்னி(புல்கிட் சாம்ராட்), சூச்சா(வருண் சர்மா), ஜாபர்(அலி பாசல்) மற்றும் லாலி(மனோஜ் சிங்). சிறை சென்ற ரிச்சா, எப்படியாவது வெளியில் வந்து அந்த நான்கு பேரையும் பழிவாங்க துடிக்கிறார். அதன்படி, அரசியல்வாதி பாபுலால் பாத்யா(ராஜீவ் குப்தா) உதவியுடன் வெளியில் வருகிறார். ஆனால் தான் இழந்த தொழில்களை மீட்க, நால்வரின் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். இதை அரசியல்வாதி எதிர்க்கிறார். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது புக்ரே ரிட்டர்ன்ஸ் படத்தின் கலகலப்பான மீதிக்கதை.

புல்கிட் சர்மா, அலி பாசல், மனோஜ் சிங், வருண் சர்மா, பங்கஜ் திரிபாதி ஆகியோரில் வருண் சர்மா மற்றும் பங்கஜ் தான் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்கள்.

இரண்டாம் பாகத்திலும் ரிச்சா, தன் நடிப்பால் ரசிகர்களை கவருகிறார். ராஜீவ் குப்தா, விஷாகா சிங் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.

முதல்பாகத்தை இயக்கிய மிர்க்தீப் சிங் லம்பாவே, இரண்டாம் பாகத்தையும் இயக்கி உள்ளார். புக்ரே-1-ல் சிறப்பாக இருந்த கதை, இரண்டாம் பாகத்தில் அதிகம் கவரவில்லை. முதல்பாகம் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாகம் கலகலப்பாக படம் விறுவிறுப்பாக செல்கிறது.

ஆண்ட்ரி மெனீஸின் ஒளிப்பதிவு ஓஹோ என இல்லாவிட்டாலும் ஓகே.,வாக உள்ளது. படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. படத்தின் நீளத்தை எடிட்டர் கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆங்காங்கே நிறைய குறைகள் தென்பட்டாலும், புக்ரே ரிட்டர்ன்ஸ் படம் ரசிகர்களை நகைச்சுவையுடன் சிரிக்கும்படி கொண்டு செல்வதால் ஒரு முறை பார்க்கலாம்.

மொத்தத்தில், புக்ரே ரிட்டர்ன்ஸ் - கலகலப்பு!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in