மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா நடிப்பில் 1969ம் ஆண் வெளிவந்த இத்திபா படம் 48 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-மேக்காகி வெளிவந்துள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இப்படம் ரசிகர்களை திரில்லராக்கியதா என்று இனி பார்ப்போம்...
இங்கிலாந்தில் வசிக்கும் விக்ரம் சேதி எனும் சித்தார்த் மல்கோத்ரா, தன்னுடைய புத்தகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய வருகிறார். வந்த இடத்தில் மனைவி கொலை விவகாரத்தில் சிக்க, போலீஸில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாயா சின்ஹா எனும் சோனாக்ஷி சின்ஹா வீட்டில் தஞ்சம் புகுகிறார். சோனாக்ஷியும், தன்னுடைய கணவனை கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளி. இவர்களை பிடிக்க போலீஸ் அதிகாரியாக தேவ் வர்மா எனும் அக்ஷ்ய் கண்ணா களமிறங்குகிறார். போலீஸ் கையில் சித்தார்த், சோனாக்ஷி சிக்கினார்களா... உண்மையிலேயே அவர்கள் தான் அந்த கொலையை செய்தார்களா.... இல்லை அதில் சிக்க வைக்கப்பட்டார்களா... என்பது இத்திபா படத்தின் சஸ்பென்ஸ் நிறைந்த மீதிக்கதை.
சித்தார்த், சோனாக்ஷி சின்ஹா, அக்ஷ்ய் கண்ணா என மூன்று பேரும் ஒவ்வொரு விதத்தில் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இருந்தாலும் மூவரில் அக்ஷ்ய் கண்ணாவின் நடிப்பு தான் அருமையாக உள்ளது.
அபே சோப்ரா தான் இந்தப்படத்தின் இயக்குநர். சஸ்பென்ஸ் கதை என்பதால் படத்தின் வேகம் குறைய கூடாது என்பதற்காக பாடல்கள் இல்லாலே படமாக்கி உள்ளனர். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனாலும் திரைக்கதையில் இருக்கும் தொய்வும், சஸ்பென்ஸ் கதை மெதுவாக நகருவதும் படத்திற்கு சற்றே பலவீனம். மற்றபடி கொலை தொடர்பான கதையை இயக்குநர் மிக நேர்த்தியாக கொண்டு சென்று உள்ளார். இயக்குநருக்கு பலமாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் வலு சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில், கொலைகள் தொடர்பான குற்ற பின்னணி கொண்ட சஸ்பென்ஸ் படமான இத்திபா - சஸ்பென்ஸ் பிரியர்களுக்கு பிடிக்குமப்பமா...!