Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தி காஞ்சூரிங் 2 (ஆங்கிலம்)

தி காஞ்சூரிங் 2 (ஆங்கிலம்),The conjuring 2
  • தி காஞ்சூரிங் 2 (ஆங்கிலம்)
  • இயக்குனர்:
13 ஜூன், 2016 - 12:10 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தி காஞ்சூரிங் 2 (ஆங்கிலம்)

பேயை அதிகம் காட்டாமலே பீதியை வரவழைத்த காஞ்சூரிங் படத்தின் இரண்டாம் பாகம்; பயமுறுத்தலில் அடுத்த கட்டம்!


ஆவி ஆராய்ச்சியாளர்களான எட்வர்ட் வாரனும், அவர் மனைவி லொரைனும் அமெரிக்க வீட்டில் ஆவிகளின் ஊடுருவலை முறியடித்து வீடு திரும்புகின்றனர். 'இனி புதிய அழைப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்' என அவர்கள் முடிவெடுக்கும் தருணத்தில், அவர்களைத் தேடி வருகிறது, இங்கிலாந்தின் என்பீல்ட் பகுதியில் வசிக்கும் பெக்கி ஹாட்ஜ்சனின் அழைப்பு! பில் வில்கின்ஸின் ஆவி பெக்கியின் மகள் ஜேனட்டின் உடலில் புகுந்து ஆட்டுவிக்க, எட்வர்ட் - லொரைன் தம்பதி என்ன செய்தார்கள் என்பது, ரத்தம் உறைய வைக்கும் இரண்டாம் பகுதி!


வேரா பார்மிகா, லொரைனாக அசத்தல்! எட்வர்டாக, பாட்ரிக் வில்சன் கச்சிதம்! ஆவி ஆட்கொண்ட மகளின் தாய் பெக்கி வேடத்தில் பிரான்செஸ் ஓகானர் அற்புதம்! பள்ளி மாணவி ஜேனட்டாக மேடிஸன் வுல்ப் ஒரு அமெரிக்க ஷாலினி; ஆவி ஆட்கொண்ட சிறுமியாக அவர் காட்டும் பாவங்களுக்கு, 'ஆஸ்கர்' விருது சத்தியம்!


ஜேம்ஸ் வானின் திரைக்கதைக்கு, பீதி சுருதி சேர்த்திருக்கிறது ஜோசப் பிஷாராவின் மிரட்டல் இசை. டான் பர்ஜஸின் கேமரா கோணங்களும், ஒளி குறைந்த இரவுகளும் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்கின்றன!


ஆவிகளைத் தடுக்க, படுக்கையறை எங்கும் மாட்டப்படும் பல சிலுவைகள் தன்னிச்சையாக சுற்றுவதும், க்ளைமாக்ஸில் மரம் முறிந்து, அதன் ஒரு பகுதி கழுமரமாக மாறுவதும் இயக்குனரின், 'ஹாரர்' திறமைக்கு சான்று! நாய் ஆவியாக மாறும் அந்த, 'கிராபிக்ஸ்' உத்தி, இதயத்தை தாக்கும் கத்தி! படம் முழுக்க பேய் நடமாட்டம் அதிகம்; ஜாக்கிரதை!


மொத்தத்தில், ‛தி காஞ்சூரிங் 2' - ‛பயடேட்டா!'




ரசிகன் குரல் : 'ஆவி பறக்க இட்லி வேணும்'னு அம்மாகிட்டே இனி கேட்பியா?



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in