Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

போக்கிரி ராஜா

போக்கிரி ராஜா,Pokkiri raja
16 மார், 2016 - 16:04 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » போக்கிரி ராஜா

தினமலர் விமர்சனம்


புழங்கும் இடத்தில் , கொட்டாவி விட்டு எல்லோரையும் பறக்கவிடும் ஹீரோ , பொது இடத்தில் உச்சாஅடிப்பவர்கள் மீது பச்ச தண்ணீரை பீய்ச்சி அடித்து பறக்கவிடும் ஹீரோயின் ... இதனால் ஏற்படும் பிரச்சினைகளும் , பஞ்சாயத்துகளும் தான்.. ஜீவா - ஹன்சிகா கூட்டணியின் போக்கிரி ராஜா


ஜீவா -ஹன்சிகா இருவரும் தமிழுக்கு எண் 1ஐ அழுத்த வும் எனும் படத்தை தன், முதல் படமாகத்தந்த இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் , நடித்திருக்கும் போக்கிரி ராஜா புத்திசாலி ராஜாவா ..? பார்ப்போம் ....


கதைப்படி., இப்படநாயகர் சஞ்சீவி - ஜீவாவுக்கு அடிக்கடி கொட்டாவி விடும் கெட்டப்பழக்கம் இருக்கிறது. இதனால், அவர் வேலையும், காதலும் கைநழுவி போகிறது. இதில், வெறுத்துப்போய் சுற்றும் ஜீவா,ஒருநாள் சுனிதா -ஹன்சிகாவை பார்க்கிறார். அப்பொழுது ஜீவாவிற்கு, ஹன்சிகா மீது கண்டவுடன் காதல் ... ஏற்படுகிறது.


அதேநேரத்தில், ஹன்சிகாவின் ஹேண்ட் பேக்கைவழிப்பறி திருடன் ஒருவன் , லபக்கிக் கொண்டு ஓட, அவனைத் துரத்திச் சென்று அவன்பறித்துச் சென்ற ஹன்ஸிகாவின் பேக்கை மீட்டு வரும் யோகி பாபுவிடமிருந்து அந்தபேக்கை வாங்கி திறந்து , பார்க்கும் ஜீவா, அதனுள்.,சிகரெட் பாக்கெட் ,குவாட்டர்பாட்டில் உள்ளிட்ட "மப்புஅயிட்டங்கள்இருப்பதை பார்க்கிறார். அதிர்ச்சியாகிறார். அது முதல் ஜீவா ,ஹன்சிகா மீது தவறான ஒப்பீனியன் கொள்கிறார்.


கொஞ்ச நாளில் ,ஹன்சிகா வேலைபார்க்கும் ஐ.டி அலுவலகத்திலேயே ஜீவாவுக்கும் வேலை

கிடைக்கிறது. அங்கேயும் ஜீவாவின் கொட்டாவி கெட்டபழக்கம் தொடர,அங்கேயும் இவருக்கு வேலை பறிபோகிறது . இந்நிலையில், அந்த ஐடி கம்பெனியில் பணிபுரிவது மட்டுமின்றி சமூக

சேவையும் செய்துவரும் சுனிதா -ஹன்சிகா, மற்றும் சகாக்களுடன் சஞ்சீவி -ஜீவாவும், ஹன்சின் சேவைக்காக தெரு தெருவாக செல்கிறார்.


அந்த நேரம், அந்த ஏரியாவில் இருபது கொலை செய்த பெரும் ரவுடியான கூலிங் கிளாஸ் குணா எனும் சிபிராஜ், பொது இடத்தில் உச்சா போவது கண்டு பொங்கி எழும் ஹன்ஸின் பேச்சைக் கேட்டு பொங்கி எழும் ஜீவா ., சிபிராஜ் மீது தண்ணீர் பீய்ச்சிஅடித்து ஜட்டியுடன் அவரை ஓட விடுகிறார். அவமானப்படுத்தப்பட்டதுடன் கூடவே ,சிபி ஜெயிலுக்கு போகவும் காரணமாகிறார்


இந்த அவமானத்தை தாங்க முடியாத சிபிராஜ், இதற்கு காரணமான ஜீவாவை கொலை செய்ய

திட்டமிடுகிறார். இதற்கிடையில், சமூக சேவைகளில் ஈடுபடும் ஹன்சிகா மீதிருந்த தவறானஅபிப்ராயம் மெல்ல , மெல்ல சரியாகி ஹேண்ட்பேக் உண்மை தெரிந்து அவர் மீதுஜீவாவுக்குகாதல் ஏற்படுகிறது. ... ,ஹன்ஸிகாவுக்கும் ஜீவா மீது காதல் வந்ததா ?இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? அல்லது , அதற்குள் ஜீவாவின் கொட்டாவி யால் பார்வை பறிபோன சிபிராஜ், ஜீவாவை பழி தீர்த்தாரா? ஜீவாவின் கொட்டாவி கெட்ட பழக்கம் அவரதுவாழ்க்கையில் எது மாதிரியான ஏற்றத்தை , மாற்றத்தை கொண்டு வந்தது?என்பதே "போக்கி ராஜா" படத்தின் கடி ,காமெடி மொத்தக்கதையும்.


லவ் பண்ண, அடுத்த செகண்ட் ஊரான் பேச்சைக் கேளு லவ் பண்றவன் பேச்சை நம்பாத... என்பது உள்ளிட்ட பன்ச் கள் பேசும் சஞ்சீவி - ஜீவா இந்த படத்தில் வழக்கத்தைக் காட்டிலும் கொட்டாவி துள்ளலுடன், இளமையாக நடித்திருக்கிறார். காமெடி காட்சிகளிலும் , கொட்டாவி காட்சிகளிலும் ஜீவாவின் முகபாவனை ரசிக்கும்படி இருக்கிறது.


ஆனால் கொட்டாவி விடும் காட்சிகளில் தியேட்டரையே தூங்க வைத்தாலும் ரசிக்க வைக்கும் ஜீவா , அந்த தியானம் , யோகா பண்ணுகிறேன் என்றபடி, வேறு வழியாக கெட்டாவி விடும் காட்சியில் தியேட்டரே நாறுகிறது. ஹன்ஸிகா மட்டும் முகம் சுளிக்காதது ஆச்சர்யம்.


சேல் பண்ண வண்டிக்கு சர்வீஸ் பண்றானா ? என்பது மாதிரி பச்சை , பச்ச பன்ச் பேசியபடி படம் முழுக்க மிகவும் பப்ளியாக வந்துபோகிற ஹன்சிகா.,இப்படத்தில் வரும் பப்ளி பப்ளி

பாடலுக்கு பட்டையை கிளப்பி இருக்கிறார். தியேட்டரில் விசில் சப்தம் க மேற்கூரையை பிரிக்கிறது. ஆனால் , ஹன்சிகாவின் நடிப்பு டிராமா வாக தெரிவது கொடுமை!


கூலிங் கிளாஸ் குணா வாக சிபிராஜ் வித்தியாசமான வில்லனாக வந்து

மிரட்டியிருக்கிறார். மேலும் , ஜீவாவின் நண்பராக வரும் யோகிபாபு தோன்றும்காட்சிகள் காமெடி கச்சிதம். பெருவாரியாக கலகலக்க வைக்கிறது. சித்ராலட்சுமணன், மயில்சாமி, முனிஸ்காந்த் - ராம்தாஸ் உள்ளிட்டோரும் சிறப்பு!


டி.இமானின் இசையில் பாடல்கள்எல்லாம் தாளம் போட வைக்கும் ராகம் .. "அத்து வுட்டா அத்து வுட்டா .... , பேபி ,பேபி... போ,போ பப்ளி பப்ளி பாடல்கள் சுபராகம்! பின்னணி இசை அபஸ்வரம்!ஆஞ்சநேயனின்ஒளிப்பதிவு கச்சிதம் கலர்புல் ... கலக்கல்!


ஜீவாவின் பெயர் ஜூவா என டைட்டில் கார்டில் வரும் போதே தெரிகிறது ... படம் எந்த லட்சணத்தில் இருக்குமென்பது ... அதே மாதிரியே .. சஞ்சீவி - ஜீவாவின்

தாத்தாவுக்கு தாத்தா அதியன் ஓரியின் போக சாஸ்த்திரம்.... வெள்ளையர் ஆட்சி கால அனிமேஷன் கிராபிக்ஸ் , ஹீரோயினின் க்ளீன் கண்ட்ரி உச்சா வாட்டர்வாஷ் ,

குப்பையை பொறுக்கி ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளும் சமூக சேவகிகளை இந்தப் படத்தில் தான் காண முடியும் .. என ஏகப்பட்ட விஷயங்களை புதுசு , புதுசாகவும் , தினுசு , தினுசாகவும் ., ஒரு தினுசாகவும் யோசித்திருக்கும் இயக்குனர் .

கெட்ட விஷயமாக கருதப்படும்கொட்டாவியை வைத்து இந்தப்படத்தில் ஒரு புது வித மெசேஜை சொல்ல வந்துள்ளார். ஆனால்,, இயக்குனர்ராம்பிரகாஷ் ராயப்பா. ரசிகர்களை கொட்டாவி விட வைத்து விடுகிறார்.


தமிழுக்கு எண் 1ஐ அழுத்த வும் எனும் .தனதுமுந்தைய படத்திற்கு முற்றிலும்மாறுபட்ட காமெடிபட முயற்சியை கையிலெடுத்தற்காக இயக்குனரை கை குலுக்கி பாராட்டலாமா ?சுண்டு கொள்ளாது விடலாமா ...? என்பதை ரசிகர்களின் சாய்ஸூக்கே விட்டு விடலாம்! என்றாலும், "போக்கிரி ராஜா, காமெடி ராஜாவாக இல்லாமல் கொட்டாவி ராஜாவாக ரசிகர்களை கொட்டாவி விட வைத்து விடுகிறது . பாவம்!


-----------------------------------------------------------------------


குமுதம் சினிமா விமர்சனம்!


அடிக்கடி கொட்டாவி விடும் பழக்கத்தால் வேலையையும் காதலையும் இழக்கும் ஒர ஐ.டி. இளைஞன் பற்றிய கதை போக்கிரிராஜா.


அதே கொட்டாவியால் ஹன்சிகாவை லவ்வும் வாய்ப்பும் கிடைக்கிறது. சமூக சேவைகளை செய்துவரும் ஹன்சிகாவுடன் இவரும் சேர்ந்து சமூக சேவை செய்யப்போக, வில்லன் சிபிராஜை அவமானப்படுத்தி ஜெயிலுக்கு அனுப்புகிறார். வெளியில் வந்த சிபிராஜ் அவரைக் கொல்ல அலைகிறார். ஜீவா - ஹன்சிகா காதல் வெற்றிபெற்றதா? வில்லன் ஜீவாவை பழிவாங்குகிறாரா? என்பது கிளைமாக்ஸ், ஜீவாவின் கொட்டாவி விடும்பழக்கம் அவரது வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை காமெடி கலந்து சொன்னதால் படம் நிற்கிறது.


ஜீவா அதே இளமைத் துள்ளளுடன் நடிக்கிறார். காமெடியில் கலக்குகிறார். இவர் கொட்டாவி விட்டால், மற்றவர்கள் தூங்கிப் போகிறார்கள். எதிரில் இருக்கும் பொருட்கள் எல்லாம் பறக்கின்றன. ஜீவா கொட்டாவி விடும்போது முகம் போகும் கோணலே சிரிக்க வைக்கிறது.


படம் முழுக்க பப்ளியாக வந்து போகிறார் ஹன்சிகா. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து துரத்துவது நல்ல ஐடியா.


'நானும் ரவுடிதான்' ரக வில்லன் கேரக்டரில் சிபிராஜ் வித்தியாசம் காட்டியுள்ளார். பல இடங்களில் அப்பாவை நினைவுபடுத்தியிருக்கிறார்.


ஜீவாவின் நண்பன்கள் எல்லோருமே இடத்துக்குத் தகுந்தமாதிரி கலகலக்க வைக்கிறார்கள்.


டி.இமான் இசையில் குறிப்பாக பப்ளி பப்ளி பாடல் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு கலர்ஃபுல்.


கொட்டாவியை வைத்து ஏதோ ஒரு மெஸேஜை சொல்ல வருகிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா நம்முடைய பண்டைய மருத்துவ நூல்களைக் காத்துவந்த (அதியன்ஓரி) சித்தரின் காற்றில் உலகை அடக்கும் யோக சக்தியை அவரது இன்றைய தலைமுறை பேரனான ஜீவாவின் கொட்டாவி வழியாக வெளிப்படுத்த முயற்சிப்பது புதுசு இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் சீரியஸாகவும் கொண்டு போயிருக்கலாம் என்றாலும், போக்கிரிராஜா - காமெடி ராஜா.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in