நடிகர்கள் : ஷாகித் கபூர், ஆலியா பட், சஞ்சய் கபூர்
இயக்குநர் : விகாஸ் பால்
ஷாகித் கபூர், ஆலியா பட் நடிப்பில் ரொமான்ட்டிக் காமெடி படமாக வெளிவந்திருக்கும் படம் தான் ஷாந்தார். இந்தப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
பிபின் அரோ எனும் பங்கஜ் கபூரின் வளர்ப்பு மகள் ஆலியா எனும் ஆலியா பட். ஆலியாவை தத்து பிள்ளையாக வளர்ப்பது பிபினின் அம்மா சுஷ்மா செத்துக்கும், பிபினின் மனைவிக்கும் பிடிக்கவில்லை. அதேசமயம் பிபின் வாரிசான இஷா எனும் சனா கபூரை, ஆலியாவுக்கு அவ்வளவு பிடிக்கும். சனாவை கோடீஸ்வரரான ராபின் எனும் விகாஷ் சர்மாவுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த திருமண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் நபராக ஷாகித் கபூர் வருகிறார். வந்த இடத்தில் ஷாகித்திற்கு ஆலியா மீது காதல். ஆனால் இந்த காதல் ஆலியாவின் அப்பாவான பங்கஜ் கபூருக்கு பிடிக்கவில்லை. ஆலியா-ஷாகித்தின் காதல் கைகூடியதா...? என்பதை கலகலப்பாக சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் ஷாந்தார் படத்தின் மீதிக்கதை.
திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக வரும் ஷாகித் கபூர், தனது ரோலை பக்காவாக செய்திருக்கிறார். அவரைப்போன்று ஆலியாவும் தனது ரோலை சிறப்பாக செய்திருப்பதுடன் பிகினியில் தோன்றி ரசிகர்களை சூடேற்றியிருக்கிறார். பங்கஜ் கபூர், சனா கபூரின் நடிப்பும் ஓ.கே., ஆனால் சஞ்சய் கபூரின் நடிப்பு தான் ஓவர் ஆக்ட்டிங்காக தெரிகிறது.
குயின் படத்தை இயக்கிய விகாஸ் அலி தான் ஷாந்தார் படத்தையும் இயக்கியுள்ளார். ஆனால் குயின் படத்தில் இருந்த விகாஸின் மேஜிக் இந்தப்படத்தில் இல்லை. படத்தின் முதல் பாகம் மெதுவாகவும், இரண்டாம் பாகவும் ரசிகர்களை சலிப்படைய செய்யவும் செய்கிறது. படத்திற்கு ஆறுதலே இசை தான்.
ஷாந்தார் படத்தில் கதையே இல்லை; போதாகுறைக்கு படமும் மெதுவாக நகருவது ரசிகர்களை சலிப்படைய செய்கிறது. படத்தில் காமெடி இருக்கிறது என்று சொல்கிறார்கள்; ஆனால் சிரிப்பு தான் வர மறுக்கிறது.
மொத்தத்தில், ''ஷாந்தார் - ஸ்லோ அண்ட் போரிங்''
ரேட்டிங் - 1/5