நாயகன் - ராம் சரண்
நாயகி - ராகுல் ப்ரீத்தி சிங்க்
இயக்குனர் - ஸ்ரீனு வைட்டாலா
தெலுங்கு திரை உலகின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ப்ரூஸ் லீ. இப்படம் தமிழில் ப்ரூஸ் லீ 2 என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியடப்பட்டுள்ளது. தமிழக ரசிகர்கள் ககைவிட்ட நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதா என பார்ப்போம்.
ராம் சரண் ஒரு சண்டை கலைஞன், தன் குடும்பத்துகாக வாழ்பவன்.தன் தங்கையின் படிப்பிற்காக தனது படிப்பை தியாகம் செய்கிறார்.வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் அருன் விஜயால் அவரது தங்கைக்கு பிரச்சனை ஏற்படுகிறது .அப்புறம் பிரச்சனையை எப்படி தீர்த்தார், ஹீரோயின் ராகுல் பிரீத்தி சிங் கிற்கு என்ன வேலை என்பதை வெள்ளி திரையில் காண்க.
இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா ஆந்திர ரசிகர்களை கையாள நன்றாகவே பழகியிருக்கிறார். எப்போது கதையை கவனிக்க வைக்க வேண்டும், எப்போது கைதட்ட வைக்க வேண்டும் அறிந்து காட்சிகளை அமைத்திருக்கிறார். இந்த செயல்களின் விளைவு ப்ரூஸ் லீ எனும் ஒரு ஆக்ஷன் திரைப்படம். அவரது ஹிட் படங்களின் வரிசையில் நிச்சயம் இதை சேர்த்து கொள்ளலாம்.
என்னதான் பொழுது போக்கு படமாக இருந்தாலும் படத்தின் லாஜிக்கில் ஒரு கண் வைத்து அது தவறாமல் பார்த்து கொள்கிறார். இது தான் அவரின் வெற்றி. ராம் சரணும் தன் கடமை உணர்ந்து அடித்து நொருக்கியிருக்கிறார். சண்டை மற்றும் நடன காட்சிகளில் பாஸாகும் அவர், உண்ர்ச்சி பூர்வமான காட்சிகளில் மிக லேசாக தடுமாறுகிறார்.பிரச்சனைகள் சூழ் நாயகன் எப்படி அதை சமாளிக்கிறார் என்கிற பழைய பழக்கப்பட்ட கதைதான். அதை சொல்லும் விதத்தில் முன்பாதியில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் இயக்குனர்.
இரண்டாம் பாதில் வரும் நகைச்சுவை காட்சிகள் சற்றே தொய்வை ஏற்படுத்தினாலும், நேர்த்தியான சண்டை காட்சிகள் என படம் கவனிக்க வைக்கிறது. இந்த களேபரத்திலும் ஹீரோயினின் கதாபாத்திரம் படம் முழுவதும் வரும் படி பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர்.
எனினும் அந்த வழக்கமான ஃபார்முலாவை இரண்டாம் பாதியில் தவிர்த்திருக்கலாம். ராகுல் பீரித்தி சிங் மிக அழகாக இருக்கிறார் விரைவில் ஆந்திராவின் கனவு கண்ணி ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
அருன் விஜய் தான் நடித்த வில்லன் வேடத்திற்கு உயிர் கொடுத்து தனது முதல் தெலுங்கு படத்தில் அசத்தியிருக்கிறார். இன்னும் நல்ல ரோல்கள் வந்தால் தெலுங்கு சினிமாவில் இவரும் முக்கிய இடம் பிடிக்கலாம். என்னை அறிந்தால் அளவிற்கு இல்லை என்றாலும் அசத்தியிருக்கிறார் மனிதர்.
தமனின் பாடல்களும் பின்னணி இசையும், படத்திற்கு பக்கபலம். மனோஜ் பரமகம்ஷா வின் ஒளிப்பதிவில் காட்சிகளில் கண்ணாடி தெளிவு.
என்னதான் படத்திற்கு எல்லாம் நன்றாக அமைந்தாலும் , வழக்கமான ஃபார்முலாவில் அமைந்த இரண்டாம் பாதி அனைத்தையும் லேசாக பதம் பார்க்கிறது.மொத்தாத்தில், ஒரு ஆக்ஷன் படம் சற்றே சராசரியான இரண்டாம் பாதி உங்களை பாதிக்காது என்றால் தாராளமாக செல்லலாம் திரையரங்கிற்கு.
ப்ரூஸ் லீ 2 - பொழுதுபோக்குவான்