Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அசுரா (தெலுங்கு)

அசுரா (தெலுங்கு),Asura (Telugu)
  • அசுரா (தெலுங்கு)
  • நர ரோஹித்
  • பிரியா பானர்ஜி
  • இயக்குனர்: கிருஷ்ணா விஜய்
06 ஜூன், 2015 - 11:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அசுரா (தெலுங்கு)

ஒரு மரண தண்டனை கைதி சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கிறான். அது நிறைவேறியதா இல்லையா என்பதே அசுரா படத்தின் ஒருவரிக்கதை. இதில் நர ரோஹித் சிறைக் காவலர் எனும் மிரட்டலான போலீசாக நடித்திருக்கிறார், தூக்கு தண்டனை கைதியாக ரவி வர்மா நடித்திருக்கிறார்.படத்தை இயக்கி இருப்பது அறிமுக இயக்குனர். கிருஷ்ணா விஜய். இரு மனிதர்களுக்குள் நடக்கும் Mind game தான் படத்தின் கதைக்களம்.

நாயகன் ரோஹித் சட்ட ஒழுங்கை பின்பற்றும் சிறைக் காவலராக வலம் வருகின்றார். அவரது கண்காணிப்பின் கீழ் மரண தண்டனைக் கைதியாக ரவி வர்மா சிறைக்கு வருகின்றார்.ரவி வர்மா ரோஹித்தை ஏமாற்றி விட்டு சிறையிலிருந்து தப்ப சதித்திட்டம் தீட்டுகின்றார். திட்டம் தீட்டியபடி ரவி வர்மா தப்பி சென்றாரா ரோஹித் அவரை பிடித்து தூக்கு தண்டனையை நிறைவேற்றினாரா என்பதுதான் திகில் திருப்பங்கள் நிறைந்த அசுரா படத்தின் மீதிக் கதை.

படத்தின் முன்பாதியை தான் (வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடன்) கதைக்கு ஏற்றார் போல் வடிவமைத்து கொண்டு திடுக்கிடும் இடைவேளையுடன் இரண்டாம் பாதிக்கு வரவேற்கிறார் இயக்குநர்.மேலும் இரண்டாம் பாதியில் கதை சற்று குறைவு தான் என்றாலும், திடுக்கிடும் திருப்பங்களால் அந்த குறையை போக்குகிறார்.

டோலிவுட்டில் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நர ரோஹித் அசுரா படத்தில் கட்டுப்பாடான, சட்டத்தை மதிக்கும் ஜெயிலராக தேவையான அளவு நடிப்பை சரியாக வழங்கியிருக்கிறார். அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்புகளும் ரசிகர்களிடம் கைத்தட்டு பெற்று தருகின்றன. ரவி வர்மாவும் பல வருடங்களுக்கு பின்னர் வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் நாயகியாக ப்ரியா பான்ர்ஜி அழகாக வந்து ரசிகர்களை கவர்கிறார். ராமா ராவ் ஜெயிலரின் உதவியாளர் பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.விஸ்வேஸ்வரின் ஒளிப்பதிவு படத்தை பளிச்சென தூக்கிப்பிடிக்கிறது.படத்தின் இசை சாய் கார்த்திக், படத்திற்கு பொருத்தமான பின்னனி இசையுடன் அவ்வப்போது மிரட்டுகிறார். பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. பெரும்பாலும் பாடல்கள் Montage ஷாட்களாக போகின்றன.

மொத்தமாக பார்த்தால், முதல் பாதி சற்றே மெதுவான இரண்டாம் பாதியுடன் சென்றாலும் கிளைமாக்ஸ் அந்த தொய்வை மறக்க வைக்கிறது. நாயகன் ரோஹித் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இயக்குநர் விஜய்யின் நுட்பமான இயக்கம் தெலுங்கு சினிமாவை அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வைக்கலாம்.எது எப்படியோ தெலுங்கு சினிமாவிற்கு இப்படம் புது முயற்சியே நிச்சயம் இதை பாராட்டி ஆக வேண்டும்.




அசுரா - பாராட்டப்பட வேண்டிய திகில் பயணம்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in